Inaiya Sevaigal: ஆன்லைனில் மணல் புக்கிங் செய்வது எப்படி?

ஆன்லைனில் மணல் புக்கிங் செய்வது எப்படி?





தமிழ்நாடு அரசிடம் ஆன்லைனில் மணல் புக்கிங் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

முதலில் ஒரு லாரியைத் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது லாரி உரிமையாளரிடம் தமிழ்நாடு அரசிடம் பதிவு செய்யப்பட்ட லாரியை மணல் புக்கிங் செய்து கொள்முதல் செய்ய தேவை எனக் கூறி லாரியை தயார்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

https://www.tnsand.in/Guest/Booking

2. முதலில் குவாரியைத் தேர்ந்தெடுங்கள்.

3. நீங்கள் தயார்படுத்தி வைத்துள்ள லாரியின் பதிவு எண்ணை உள்ளிடுங்கள்.

4. அடுத்து அச்சைத் தேர்ந்தெடுங்கள்.

5. தேவைப்படும் மணலின் அளவைத் தேர்ந்தெடுங்கள்.

6. வாடிக்கையாளர் பெயர், மொபைல் எண், முகவரி, வட்டம், மாவட்டம், பின்கோடு மற்றும் கேப்சாவை உள்ளிட்டு Create Booking பட்டனை அழுத்துங்கள்.

7. அடுத்து வரும் ஓடிபி யை உள்ளிட்டு சப்மிட் கொடுத்துவிடுங்கள்.

8. அடுத்து நெட் பேன்க்கிங், டெபிட் கார்டு மூலம் உரிய தொகையை செலுத்தி விடுங்கள்.

9. உங்களுக்கென்று வரிசை எண் ஒதுக்கப்படும். புக்கிங் டீடெய்ல்ஸ் யும் அனுப்பப்படும்.

10. க்யூ ஆர் கோடு உள்ள புக்கிங் டீடெய்ல்ஸ் பிரின்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

11. அதை லாரி டிரைவர்கள் எடுத்து செல்ல வேண்டும்.

12. குவாரியில் அதை ஸ்கேன் செய்து மணல் வழங்கப்படும்.

13. கொள்முதல் செய்வதற்கு 30 மணி நேரத்திற்கு முன் குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் மூலம் நம் வரிசை முறையை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

7 comments: