Inaiya Sevaigal: TNPSC யில் ONE TIME REGISTRATION செய்வது எப்படி?

TNPSC யில் ONE TIME REGISTRATION செய்வது எப்படி?



TNPSC யில் ONE TIME REGISTRATION எனும் நிரந்தரப் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

TNPSC யில் எந்த ஒரு தேர்வுக்கும் முன்னரே One Time Registration செய்வது கட்டாயமாகும். One Time Registration செய்த பிறகு தான் நம்மால் லாக் இன் செய்து ஏதேனும் ஒரு தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். எனவே TNPSC தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் One Time Registration அவசியமாகும். அதை எவ்வாறு செய்வது என்பதை இங்கே பார்ப்போம்.

1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.


2. உள்ளே சென்றதும் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், தாயார் பெயர், பாலினம், பிறந்த இடம், சொந்த மாவட்டம், தந்தையார் பிறந்த இடம், தாய்மொழி, தேசிய இனம், மதம், சாதி, பத்தாம் வகுப்பு சான்று பதிவு எண், தேர்ச்சி பெற்ற மாதம் மற்றும் வருடம், பத்தாம் வகுப்பு கல்விமுறை, பத்தாம் வகுப்பு சான்றிதழ் எண், இமெயில் முகவரி, மொபைல் எண், லாக் இன் ஐடி, பாஸ்வேர்ட், தற்போதைய முகவரி, நிரந்தர முகவரி, பின்கோடு ஆகியவற்றை உள்ளிட்டு உறுதிமொழி தேர்வு பெட்டியில் டிக் செய்து கேப்சாவையும் உள்ளிட்டு Save and Continue பட்டனை அழுத்துங்கள்.

3. தற்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும் அதை உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.

4. அடுத்து தோன்றும் பக்கத்தில் உங்களது போட்டோவை 165 X 125 அளவில் 50 KB க்குள் ஸ்கேன் செய்து போட்டோ அப்லோட் இடத்தில் அப்லோட் செய்ய வேண்டும்.

5. அதன் கீழே உங்களது கையொப்பத்தை 80 X 125 அளவில் 20 KB க்குள் ஸ்கேன் செய்து கையொப்பம் அப்லோட் இடத்தில் அப்லோட் செய்ய வேண்டும்.

6. அடுத்து Click Save பட்டனை அழுத்த வேண்டும்.

7. அடுத்து பணம் செலுத்தும் முறையினை தேர்ந்தெடுக்க வேண்டும்.

8. உரிய பணத்தை செலுத்தி ரசீதை பிரின்ட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

1 comment:

  1. One-time registration la thirutham seivathu eppadimavattam matram seiya vendum

    ReplyDelete