மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அனைத்து ஆன்லைன் சேவைகளையும் ஒரே இடத்தில் பார்க்க வேண்டுமா? அதற்கு நாம் UMANG வெப்சைட் அல்லது ஆப்பை பார்க்க வேண்டும்.
1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
https://web.umang.gov.in/web/#/regMob
2. உள்ளே சென்றதும் மொபைல் எண்ணைக் கொடுங்கள். மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதனை உள்ளிட்டு உள்ளே செல்லுங்கள்.
3. பெயர், பிறந்த தேதி, முகவரி, மாவட்டம், மாநிலம் போன்ற விவரங்களை உள்ளிட்டு MPIN எனும் 4 இலக்க பின் எண்ணை உள்ளிட்டு உங்களது கணக்கை உருவாக்குங்கள்.
4. தற்போது லாக் இன் செய்து பாருங்கள்.
5. மத்திய அரசு மற்றும் அனைத்து மாநிலங்கள் வழங்கும் ஆன்லைன் சேகைளும் உடனே தோன்றும்.
6. உங்களுக்கு தேவையான ஆப் ஐ தேர்ந்தெடுத்து தேவையான விவரங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
7. இதை Google Play Store ல் UMANG என்ற ஆப் ஐ டவுன்லோட் செய்தும் மேற்கண்ட விஷயங்களை செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment