Inaiya Sevaigal: கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் கார்ப்பரேட் ஃபார்முலா!

கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் கார்ப்பரேட் ஃபார்முலா!


என்ன தலைப்பு இப்படி இருக்குன்னு  நினைக்காதீங்க!

சாராயத்தையே ஒழிக்கனும் நினைக்காம கள்ளச்சாராயத்தை மட்டும் ஒழிக்கனும் சொல்லுவது நியாயம் இல்லீங்க தான்ங்க இருந்தாலும் உயிரிழிப்புகளைப் பார்க்கும் போது தற்போதைக்கு இதையாவது எப்படி ஒழிப்பதுனு பார்ப்போம் வாங்க!

இதுக்கு சரியான வழி கார்ப்பரேட் ஃபார்முலா தான்ங்க.

சரி வாங்க விஷயத்துக்குப் போவோம்.

முதலாவது பாய்ன்ட்

கடையிலேயே சாராயம் விற்கும் போது அவர்கள் ஏன்ங்க கள்ளச்சாராயம் வாங்கி குடிக்க போறாங்க.

விலை தான்ங்க. கள்ளச்சாராயம் மலிவு விலையில் கிடைப்பதால் தான்ங்க.

ஆமாங்க கடை விலையை விட கள்ளச்சாராயம் விலை ரொம்ப கம்மியா இருப்பதால் அவர்கள் கடையில் வாங்கி அருந்துவதை விட்டுவிட்டு கள்ளச்சாராயம் வாங்கி சாப்பிடுறாங்க.

அப்ப கடை விலையை கள்ளச்சாராயத்தை விட கம்மியா விற்றால் அவர்கள் கள்ளச்சாராயத்தை விட்டு விட்டு கடையில் வந்து அருந்த ஆரம்பிச்சிடுவாங்க.

இதெல்லாம் நடக்குற காரியங்களா? எவ்வளவு முதலீடு போட்டு? எவ்வளவு வரி கட்டி? எவ்வளவு செலவு செய்து? எவ்வளவு பாதுகாத்து? விற்கும் போது எப்படிங்க கள்ளிச்சாராயத்தை விட கம்மி விலைக்கு கொடுக்க முடியும்னு கேட்கிறீங்களா?

சரி வாங்க கார்ப்பரேட் ஃபார்முலாவுக்கு போவோம்.

தற்போது 5 ரூபாய்க்கு பிஸ்கட் பாக்கெட் கிடைக்குது.

இன்னும் 5 வருஷம் இல்லீங்க இன்னும் 10 வருஷம் ஆனாலும் 10 ரூபாய்க்கு பிஸ்கட் பாக்கெட் கிடைக்கும்ங்க.

என்னங்க கள்ளச்சாராயத்தை ஒழிக்கிறேன்னு பிஸ்கட் பத்தி பேசுறேன்னு நினைக்காதீங்க. இதுல தான்ங்க கார்ப்பரேட் விஷயமே இருக்கு.

5 வருசத்துக்கு முன்னாடியும் 10 ரூபாய்க்கு பிஸ்கட் பாக்கெட் கிடைச்சுச்சு.

10 வருசத்துக்கு முன்னாடியும் 10 ரூபாய்க்கு பிஸ்கட் பாக்கெட் கிடைச்சுச்சு. 

15 வருசத்துக்கு முன்னாடியும் 10 ரூபாய்க்கு பிஸ்கட் பாக்கெட் கிடைச்சுச்சு.

20 வருசத்துக்கு முன்னாடியும் 10 ரூபாய்க்கு பிஸ்கட் பாக்கெட் கிடைச்சுச்சு.


அதெப்படீங்க 20 வருஷமா 10 ரூபாய்க்கு பிஸ்கட் பாக்கெட் விக்கிறது. கம்பெனி நஷ்டத்துல போகாதா? னு நீங்க கேட்கிறது புரியதுங்க. ஆனால் கம்பெனி நஷ்டத்துல போகலீங்க. பல கோடி ரூபாய் லாபத்துல தான்ங்க போகுது. இல்லைன்னா அறுபது எழுபது வருஷமா பிஸ்கட் கம்பெனி நடத்த முடியுங்களா?

ஒன்னும் இல்லீங்க இதான்ங்க ஃபார்முலா?

தற்போது 10 ரூபாய்க்கு பிஸ்கட் பாக்கெட் வாங்கினால் 50 கிராம் பிஸ்கட் இருக்கும்.

5 வருஷசத்துக்கு முன்னாடி 10 ரூபாய்க்கு பிஸ்கட் பாக்கெட் வாங்கும் போது 60 கிராம் பிஸ்கட் இருந்திருக்கும்.

10 வருஷசத்துக்கு முன்னாடி 10 ரூபாய்க்கு பிஸ்கட் பாக்கெட் வாங்கும் போது 70 கிராம் பிஸ்கட் இருந்திருக்கும்.

15 வருஷசத்துக்கு முன்னாடி 10 ரூபாய்க்கு பிஸ்கட் பாக்கெட் வாங்கும் போது 70 கிராம் பிஸ்கட் இருந்திருக்கும்.

20 வருஷசத்துக்கு முன்னாடி 10 ரூபாய்க்கு பிஸ்கட் பாக்கெட் வாங்கும் போது 60 கிராம் பிஸ்கட் இருந்திருக்கும்.

இன்னும் 5 வருஷம் கழித்து 10 ரூபாய்க்கு பிஸ்கட் வாங்கினால் 40 கிராம் பிஸ்கட் இருக்கும் அவ்வளவுதான்ங்க வித்தியாசம்.

இதான்ங்க விஷயம் விலையை எப்போதும் கள்ளச்சாராயத்தை விட குறைச்சி வையுங்கள. அதற்கேற்றாற்போல் அளவையும் குறைச்சுக்கோங்க. அந்த விலை சாதாரண விலையான 10 ரூபாய் 20 ரூபாய் லிருந்து ஆரம்பிக்கட்டும்.

உயிரை காப்பாத்துங்க!

No comments:

Post a Comment