Inaiya Sevaigal: உலகளவில் இந்தியாவின் UPI பரிவர்த்தணை முன்னணி

உலகளவில் இந்தியாவின் UPI பரிவர்த்தணை முன்னணி


புதுடெல்லி: கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் யுபிஐ மூலம் ரூ.81 லட்சம் கோடி பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 37 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஜூலை மாதத்தில் இதுவரையில் இல்லாத அளவில் ரூ.20.6 லட்சம் கோடி யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

பரிவர்த்தனை எண்ணிக்கை அடிப்படையில், பே பால், சீனாவின் அலிபே, பிரேசிலின் பிக்ஸ்ஆகியவற்றைவிட யுபிஐ மூலம்அதிக பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் மொத்தப் பணப் பரிவர்த் தனைகளில் 40 சதவீதம் டிஜிட்டல் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. பே செக்யூர் அமைப்பு வெளியிட்ட விவரங்களின்படி, யுபிஐ மூலம் வினாடிக்கு 3,729 பரிவர்த்தனைகள் நிகழ்கின்றன. 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 58 சதவீதம் அதிகம் ஆகும்.

பே செக்யூர் அமைப்பு உலக அளவில் 40 டிஜிட்டல் பரிவர்த்தனை தளங்களை ஒப்பிட்டு இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில், உலக அளவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தளங்களில் யுபிஐ முன்னணி வகிக்கிறது.

No comments:

Post a Comment