Inaiya Sevaigal: மே மாத ஊதியம் இன்றி தவிக்கும் நாகை, மயிலை ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர்கள், பணியாளர்கள்

மே மாத ஊதியம் இன்றி தவிக்கும் நாகை, மயிலை ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர்கள், பணியாளர்கள்


மயிலாடுதுறையில் இயங்கி வந்த ஆதிதிராவிடர் நல தனிவட்டாட்சியர் அலுவலகம் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி நாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டது. 


எனவே நாகப்பட்டினம் மாவட்ட ஆதிதிராவிடர் நல தனிவட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய DDO CODE மற்றும் TREASURY CODE வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்னும் வழங்கப்படவில்லை.

அதே போல் மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த ஆசிரியர்களுக்கும் விடுதி பணியாளர்களுக்கும் சீர்காழி ஆதிதிராவிடர் நல தனிவட்டாட்சியர் அலுவலகத்தின் DDO CODE மற்றும் TREASURY CODE வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்னும் வழங்கப்படவில்லை.
 
இந்தப் பணிகளை ஆதிதிராவிடர் நல இயக்குனரகம் செய்திருக்க வேண்டும்.

ஆனால் ஆதிதிராவிடர் நல இயக்குனரகம் செய்யவில்லை. மயிலாடுதுறை ஆதிதிராவிடர் நல தனிவட்டாட்சியர் அலுவலகத்தை மாற்றி ஆணையிட்ட இயக்குனரகம் அந்த அலுவலகத்தின் பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க ஆனையிட்டிருக்க வேண்டும். அதுதான் உண்மையான உத்தரவு. ஆனால் அலுவலகத்தை மட்டும் மாற்றி உத்திரவிட்டுவிட்டு DDO CODE மற்றும் TREASURY CODE பெற்றுத்தர உத்தரவிடாதது. பணியாளர் நலனில் அக்கறையின்மையை காட்டுகிறது.

இதனால் மயிலாடுதுறை ஆதிதிராவிடர் நல தனிவட்டாட்சியர் அலுவலக கட்டுப்பாட்டில் இருந்து வந்த ஆசிரியர்கள் மற்றும் விடுதி பணியாளர்கள் மே மாத ஊதியம் இன்றி தவிக்கின்றனர். பெரும்பாலானோருக்கும் 5 ஆம் தேதி கடன் தவணை தேதி என்பதால் அபராத தொகையை தவிர்க்கும் பொருட்டு நகையை அடகு வைத்தும் கந்து வட்டிக்கு பணம் வாங்கியும் கடனை கட்டியுள்ளனர். 

சிலர் கடன் வாங்க முடியாத காரணத்தால் அபாரத தொகையையும் சேர்த்து கட்ட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி உள்ளனர்.

இவ்வளவுக்கும் காரணம் ஆதிதிராவிடர் நல இயக்குனரகத்தின் உத்தரவே ஆகும். அலுவலகத்தை மாற்றி உத்தரவிட்ட உடனேயே DDO CODE க்கும் TREASURY CODE க்கும் சேர்த்து உத்திரவிட்டிருந்தால் இந்த நிலை வந்தே இருந்திருக்காது.

இதை உணருமா சென்னை ஆதிதிராவிடர் நல இயக்குனரகம்!

1 comment:

  1. ஒரு நாளும் இயக்குனரகம் உணராது. சங்க நடவடிக்கை எடுக்காதது முற்றிலும் வருத்தம் அளிக்கிறது.

    ReplyDelete