Inaiya Sevaigal: 3 கி.மீ ல் உள்ள ஆசிரியர் இருக்கும் போது 50 கி.மீ ல் உள்ள ஆசிரியருக்கு மாற்றுப் பணி வழங்கியுள்ள ஆதிதிராவிடர் நலத்துறை

3 கி.மீ ல் உள்ள ஆசிரியர் இருக்கும் போது 50 கி.மீ ல் உள்ள ஆசிரியருக்கு மாற்றுப் பணி வழங்கியுள்ள ஆதிதிராவிடர் நலத்துறை


ஆதிதிராவிடர் நலத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புதலும் பதவி உயர்களை வழங்குதலும் பல ஆண்டுகளாக செய்யப்படாத காரணத்தால் இடைநிலை ஆசிரியர் முதல் தலைமை ஆசிரியர் வரை பல ஆண்டுகளாக காலியாக உள்ளன.

இந்நிலையில் கடந்த 31.05.2023 முதல் பணி ஓய்வு மற்றும் பல்வேறு காரணங்களால் பல பள்ளிகளில் ஒரு ஆசிரியர் கூட இல்லாமல் ஆசிரியர் இல்லா பள்ளிகளாக மாறி உள்ளன.

தற்போது பள்ளி திறக்க உள்ளதால் அப்பள்ளிகளை நிர்வகிக்கும் பொருட்டு அப்பள்ளிகளுக்கு மாற்றுப்பணியில் ஆசிரியர்களை நியமிக்க ஆதிதிராவிடர் நலத்துறை முடிவு செய்து ஆணைகளைப் பிறப்பித்துள்ளது.

அந்த மாற்றுப் பணி ஆணைகளைக் கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆமாம் மாற்றுப்பணி என்பது அருகாமையில் உள்ள ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது விதி.

ஆனால் காலியாக உள்ள பள்ளிக்கு 3 கி.மீ ல் ஆசிரியர் இருக்கும் போது 50 கி.மீ தொலைவில் உள்ள ஒரு ஆசிரியருக்கு மாற்றுப் பணியை வழங்கியுள்ளது ஆதிதிராவிடர் நலத்துறை.

இதற்கு பெயர் தான் நிர்வாக நலனா? என ஆசிரியர்கள் கொந்தளித்துள்ளனர். 

மாற்றுப் பணியில் ஆசிரியர்களை நியமிக்கும் முன் அருகாமைப்பள்ளியில் உள்ள ஆசிரியர்களை கவனத்தில் கொள்ளுமா ஆதிதிராவிடர் நலத்துறை. 

1 comment:

  1. இந்த மாதிரியான மாற்று பணி ஆணைகள் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்.பாவம் அந்த ஆசிரியகள்......

    ReplyDelete