அவர் நீட் தேர்வில் எவ்வாறு வெற்றி பெற்றார். என்பதையும் அடுத்து வரும் மாணவர்களுக்கு போதுமான வழியையும் காட்டியுள்ளார்.
அவற்றைப் பற்றி இங்கு விரிவாகக் காண்போம்.
முதலில் பிரபஞ்சன் பற்றி காண்போம். அப்பா ஜெகதீஷ் விழுப்புரம் மாவட்டம் மேல் ஒலக்கூர் அரசு பள்ளி சமூகவியல் ஆசிரியர். அம்மா மாலா விழுப்புரம் மாவட்டம் நெகனூர் அரசு பள்ளி கணித ஆசிரியர் ஆவர்.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் தமிழக மாணவர் பிரபஞ்சன்.
பத்தாம் வகுப்பு வரை செஞ்சி சாரதா மெட்ரிக் பள்ளியில் படித்த பிரபஞ்சன், 12ம் வகுப்பை சென்னை மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா CBSE பள்ளியில் முடித்துள்ளார்.
10 ஆம் வகுப்பு வரை மாநில பாடத்திட்டத்தில் படித்துள்ளார். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மட்டும் CBSE பாடத்திட்டத்தில் படித்துள்ளார். ஆனால், நீட் தனக்கு கடினமாக இருக்கவில்லை என்று கூறுகிறார்.

என்சிஆர்டி புத்தகங்களில் இருந்து தான் நீட் தேர்வுக்கான கேள்விகள் அதிகம் வரும் என்பதை கருத்தில் கொண்டு என்சிஆர்டி புத்தகங்களை நன்கு படித்ததாகவும் தெரிவிக்கிறார்.
நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்ச்சி பெற கடின உழைப்பும், பயிற்சியும் மிக மிக முக்கியம். ஒரே முறையில் தேர்வு ஆவதும், சில மாணவர்கள் பல ஆண்டுகள் பயிற்சிக்கு எடுத்துக் கொள்வதும் அவரவரைப் பொறுத்தது என தெரிவிக்கிறார்.

அவர் அடுத்து வரும் மாணவர்களுக்கு தெரிவித்துள்ள கருத்து தான் வரும் காலங்களில் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான எனர்ஜி டானிக்.
”நீட் தேர்வு மிகவும் கடினமானது என்ற மனநிலையில் இருந்து மாணவர்கள் முதலில் வெளிவர வேண்டும். அந்த மனநிலை வந்தால்தான் படிக்க முடியும். படிப்பதெல்லாம் அதற்கு பிறகுதான். எளிதானது என்று நம்மால் முடியும் என்று நம்ப வேண்டும். அதற்கு பிறகுதான் எல்லாமே. நீட் தேர்வு அந்த அளவுக்கு கடினமானது எல்லாம் இல்லை. புரிந்து படித்தாலே போதும்,” என தன் வெற்றிக்கான வழிமுறையைப் பற்றிக் கூறுகிறார் பிரபஞ்சன்.

நீட் தேர்வு கடினமானது தான் அதே நேரத்தில் வெற்றி பெறக் கூடியது தான் என அடுத்து வரும் மாணவர்களுக்கு தெரிவிக்கிறார் பிரபஞ்சன்.
No comments:
Post a Comment