தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்பிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர் மொத்த பணியிடங்கள் 366
பட்டதாரி ஆசிரியர் மொத்த பணியிடங்கள் 80
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 19
தொகுப்பூதியம்
இடைநிலை ஆசிரியர் ரூ. 7500
பட்டதாரி ஆசிரியர் ரூ. 10000
முதுகலைப் பட்டதாரி ரூ. 12000
இவர்களை பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பிக்கொள்ளலாம்.
இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை உண்டு.
அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஒரு வெள்ளைத் தாளில் அனுப்புதல் பெறுதல் முறையில் தாங்கள் பணிபுரிய விருப்பம் உள்ள பள்ளியின் பெயரைத் தெரிவித்து விண்ணப்பம் தயார் செய்து 20.01.2023 க்குள் கொடுக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment