Inaiya Sevaigal: பொங்கல் விழா - அறிவியல் மற்றும் கோள்கள் ரீதியிலான உண்மைகள்!

பொங்கல் விழா - அறிவியல் மற்றும் கோள்கள் ரீதியிலான உண்மைகள்!


ஆடி பட்டம் தேடி விதை என்பதற்கேற்ப ஆடி மாதம் விதைத்த நெல்லை தை மாதம் அறுவடை செய்வோம். அந்த தை மாதம் முதல் நாளில் அறுவடை செய்த அரிசியால் வெல்லம் கலந்து சூரிய பகவானுக்கு படையிலிடுவதே பொங்கல் விழா ஆகும்.

பொதுவாக பச்சரிசி உணவு செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆகும்.

அறிவியல் ரீதியாக தை மாதம் (அதாவது காலையில் பனி அதிகமாகவும் மதியம் வெயில் அதிகமாகவும் காணப்படும் மாதம்) பச்சரியால் செய்யப்பட்ட உணவு உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தையும், நீண்ட நேர ஆற்றலையும் வழங்குகிறது. ஏனெனில் பச்சரிசி உணவு செரிப்பதற்கு நீண்ட நேரம் ஆவதால் ஆற்றலும் நீண்ட நேரத்திற்கு உடலுக்கு கிடைக்கும். தை மாதம் நிலவும் தட்ப வெப்ப தன்மைக்கு நீண்ட நேர செரித்தலானது உடலுக்கு தேவையான ஒன்றாக உள்ளது. முதல் பச்சரிசி உணவு இனிப்பாக அமைய வேண்டும் என்பதால்தான் பொங்கல் விழாவில் பிராதான உணவாக சர்க்கரைப் பொங்கலை நமது முன்னோர்கள் வடிவமைத்துள்ளனர்.

ஆகவே தை மாதம் பச்சரிசி உணவு தட்பவெப்ப சூல்நிலைக்கு ஏற்ற வகையில் நமது உடலுக்கு அவசியமாகிறது. ஆகவே தான் நமது முன்னோர்கள் பொங்கல் விழாவை ஏற்படுத்தி உள்ளனர்.

கோள்கள் ரீதியாக சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிப்பதே மகரசங்கராந்தி அதாவது பொங்கல் ஆகும்.

இந்த மாதத்தில் தான் அனைவருக்கும் பெரும்பாலும் பல நன்மைகளும், பயன்களும் வந்து சேரும். அதனால் தான் தைப் பிறந்தால் வழிப் பிறக்கும் என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள்.

No comments:

Post a Comment