Inaiya Sevaigal: பொங்கல் வைக்க உகந்த நேரம்!

பொங்கல் வைக்க உகந்த நேரம்!


தை மாதம் முதல் தைப் பொங்கல் - 15.01.2023, ஞாயிற்றுக்கிழமை.

தைப் பொங்கலுக்கு ஏற்ற லக்னங்கள் மகரம் மற்றும் கும்பம் லக்கினங்கள் ஆகும்.

இந்த இரு லக்கினங்களில் பொங்கல் வைப்பது தான் உயர்ந்த பலனைத் தருவதாகும். மற்ற லக்கினங்களில் பொங்கல் வைப்பது மத்திம பலனையே தருவதாகும்.

மகர லக்னமும் கும்ப லக்னமும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை உள்ளது.

ஆகவே காலை 6 மணி முதல் காலை 10 மணிக்குள் பொங்கல் பானை வைத்து அடுப்பை பற்ற வைப்பது சிறந்த பலனைத் தருவதாகும். மதியம் 12 மணிக்குள் பூஜை செய்து விட வேண்டும்.

இருப்பினும் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை நேரம் நன்றாக உள்ளது. இந்த 5 மணி நேரத்திற்குள் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் பொங்கல் பானை வைத்து அடுப்பை பற்ற வைத்து பூஜை செய்வதும் சிறப்பு தான்.

தை மாதம் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் - 16.01.2023 திங்கட்கிழமை.

திங்கட் கிழமை மாலை நேரத்தில் பொங்கலிட்டு மாடுகளுக்கு உணவளிப்பது சிறந்த ஒன்றாகும்.

மாலை 3 மணிக்கு மேல் மாலை 6 மணிக்குள் பொங்கலிட்டு கோ பூஜை செய்வது சிறப்பாகும்.

No comments:

Post a Comment