ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள Gold Soverign Bond எனும் தங்கப்பத்திரம் என்றால் என்ன என்று பார்ப்போம்.
தங்கப்பத்திரத்தை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிடும். இந்த ஆண்டு டிசம்பர் 19 ஆம் வெளியிட்டுள்ளது. இது டிசம்பர் 23 வரை திறப்பில் இருக்கும்.
இந்த தங்கப்பத்திரத்தின் டிசம்பர் 19 அன்றைய விலை ஒரு கிராம் (99.99 கேரட்) 5409 ஆகும்.
இந்த தங்கத்தை நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் மூலமாக வாங்கலாம்.
வாங்கும் போது கிராமுக்கு 50 ரூபாய் சலுகை வழங்கப்படுகிறது.
ஓராண்டு முதிர்ச்சிக்கு 2.50 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
இந்தப் பத்திரத்தை நாம் கணக்கு வைத்திருக்கும் அதே வங்கியில் வைத்து தங்கப்பத்திர மதிப்பில் 90 சதவீத தொகையை கடனாக பெறலாம்.
இதில் என்ன லாபம் என்பதைப் பார்ப்போம்.
உதாரணமாக கடந்த டிசம்பர் 2017 அன்று வெளியிட்ட தங்கப்பத்திரத்தின் ஒரு கிராம் விலை 2890 ஆகும்.
இதன் டிசம்பர் 2018 அன்றைய மதிப்பு 3140 ஆகும். இதற்கு 2.5 சதவீத வட்டி ரூ.78.50 ஆகும்.
இதன் டிசம்பர் 2019 அன்றைய மதிப்பு 3911 ஆகும். இதற்கு 2.5 சதவீத வட்டி ரூ.97.77 ஆகும்.
இதன் டிசம்பர் 2020 அன்றைய மதிப்பு 5020 ஆகும். இதற்கு 2.5 சதவீத வட்டி ரூ.125.50 ஆகும்.
இதன் டிசம்பர் 2021 அன்றைய மதிப்பு 4811 ஆகும். இதற்கு 2.5 சதவீத வட்டி ரூ.120.50 ஆகும்.
இதன் தற்போதைய மதிப்பு அதாவது டிசம்பர் 2022 மதிப்பு 5409 ஆகும். வாங்கிய விலையை விட 2519 ரூபாய் அதிகமாகும்.
ஆக வட்டித் தொகையாக 422.27 ரூபாயும் உயர்வுத் தொகையாக 2519 ரூபாயும் ஆகக் கூடுதலாக 2941.27 ரூபாய் ஒரு கிராமுக்கு லாபம் ஆகும்.
No comments:
Post a Comment