தற்போதைய நிலைப் படி ஓய்வூதியம் பெற அரசு ஊழியர் மற்றும் அவரது துணைவர் இருவரின் பெயரில் உள்ள கூட்டு வங்கிக் கணக்கு தேவைப்படுகிறது.
இதனால் பல்வேறு சிக்கல்கள் எழுவதாக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.
உதாரணமாக கணவன் மனைவி இருவரும் பணியிலிருக்கும் சூழ்நிலையில் இருவரும் உள்ள ஒரே வங்கிக் கணக்கு பணப்பரிவர்த்தனை சிக்கலானது.
இதனையடுத்து கருவூலம் மற்றும் கணக்குத் துறை அதிகாரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஓய்வூதியம் பெற கூட்டு வங்கிக் கணக்கு அவசியம் இல்லை என்றும் தனி வங்கிக் கணக்கே போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி கூட்டு வங்கிக் கணக்கிற்காக ஓய்வூதியப் பலன்கள் தாமதமாகாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment