Inaiya Sevaigal: 8 ஆண்டுகளுக்குப் பிறகு வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்பட உள்ளது!?

8 ஆண்டுகளுக்குப் பிறகு வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்பட உள்ளது!?


வரும் பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படாமல் உள்ளது.

அதன்பிறகு பல்வேறு வரிச்சலுகைகள் வழங்கப்பட்ட வந்தன. ஆனால் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படாமல் இருந்து வந்தது.

தற்போது கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் பல தரப்பிடம் இருந்தும் 8 ஆண்டுகளாக தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படாமல் உள்ளது. அதை உயர்ததப்படல் வேண்டும் என்ற கோரிக்கை பிராதனமாக வைக்கப்பட்டதை அடுத்து வரும் பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment