மிக எளிமையாக நீங்களே உங்கள் EB எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் உங்கள் ஆதார் அட்டையை போட்டோ எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அந்த போட்டோ 500 எம்பிக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
தற்போது கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் உங்கள் 11 இலக்க மின் இணைப்பு எண்ணை உள்ளிடுங்கள்.
தற்போது என்டர் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது உங்கள் மின் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை காட்டும்.
டு யூ வான்ட் டு ஒடிபி சென்ட் டு திஸ் டு மொபைல் என கேட்கும். எஸ் கொடுத்து என்டர் பட்டனை அழுத்துங்கள்.
(அந்த மொபைல் எண் வேண்டாம் வேறு மொபைல் எண் வேண்டும் என நினைத்தால் நோ பட்டனை அழுத்துங்கள். தற்போது தோன்றும் திரையில் உங்களுக்குத் தேவையான புதிய மொபைல் எண்ணை உள்ளிடுங்கள் தற்போது டு யூ வான்ட் டு ஓடிபி சென்ட் டு திஸ் டு மொபைல் என்ற பெட்டியை டிக் செய்து என்டர் பட்டனை அழுத்துங்கள்.)
தற்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும்.
அந்த ஓடிபி எண்ணை உள்ளிட்டு வேலிடேட் ஓடிபி பட்டனை அழுத்துங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் உங்கள் வீடு சொந்த வீடா வாடகை வீடா சொந்த வீடுதான் ஆனால் பெயர் இன்னும் மாற்றப்படாமல் உள்ளதா என்று மூன்று பெட்டிகள் இருக்கும் அதில் உங்களுக்குத் தேவையான ஒன்றை டிக் செய்யுங்கள்.
அடுத்த வரிசையில் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடுங்கள்.
அடுத்த வரிசையில் ஆதாரில் உள்ளபடி உங்கள் பெயரை உள்ளிடுங்கள்.
அடுத்த வரிசையில் பிரவுஸ் என்ற பட்டனை அழுத்தி நீங்கள் முதலில் ஆதார் அட்டையை போட்டோ எடுத்து வைத்திருந்தீர்களே அந்த போட்டோவை அப்லோட் செய்யுங்கள்.
அடுத்த வரிசையில் ஐ ஹியர்பை கிவ் மை கன்சன்ட் டு லின்க் மை ஆதார் டு அபோவ் சர்வீஸ் கனெக்சன் நம்பர் என்ற பட்டனை டிக் செய்து சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.
உங்கள் ஆதார் எண் வெற்றிகரமாக சேர்க்கப்பட்டுவிட்டது.
Manikam
ReplyDelete