Inaiya Sevaigal: பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விட 100 சதவீதம் கறுப்புப்பணத்தை ஒழிக்கும் வலிமையான நடவடிக்கை

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விட 100 சதவீதம் கறுப்புப்பணத்தை ஒழிக்கும் வலிமையான நடவடிக்கை


பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விட 100 சதவீதம் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வலிமையான நடவடிக்கை

 

வருமான வரி விலக்கு உள்ள 2,50,000 வரை மட்டுமே ரொக்கப் பணப் பரிமாற்றத்திற்கு அனுமதிக்கப்படல் வேண்டும். 2,50,001 க்கு மேலான பணப் பரிமாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும். 2,50,001 க்கு மேலான பணப் பரிவர்த்தனை வங்கிகள் மூலமாக மட்டுமே நடைபெற வேண்டும் என கட்டாயம் ஆக்கப்படல் வேண்டும்.

 

வருமான வரி சட்டத்தின் படி

 

ஒரு நிதி ஆண்டில் 2,50,001 முதல் 5,00,000 வரை உள்ள வருமானத்திற்கு 5 சதவீத வருமான வரியை அந்தந்த வங்கிகளே ஆட்டோ டெபிட் செய்ய வேண்டும்.

 

ஒரு நிதி ஆண்டில் 5,00,001 முதல் 7,50,000 வரை உள்ள வருமானத்திற்கு 12,500 + 5,00,001 க்கு மேலான வருமானத்தில் 10 சதவீத வருமான வரியை அந்தந்த வங்கிகளே ஆட்டோ டெபிட் செய்ய வேண்டும்.

 

ஒரு நிதி ஆண்டில் 7,50,001 முதல் 10,00,000 வரை உள்ள வருமானத்திற்கு 37,500 + 7,50,001 க்கு மேலான வருமானத்தில் 15 சதவீத வருமான வரியை அந்தந்த வங்கிகளே ஆட்டோ டெபிட் செய்ய வேண்டும்.

 

ஒரு நிதி ஆண்டில் 10,00,001 முதல் 12,50,000 வரை உள்ள வருமானத்திற்கு 75,000 + 10,00,001 க்கு மேலான வருமானத்தில் 20 சதவீத வருமான வரியை அந்தந்த வங்கிகளே ஆட்டோ டெபிட் செய்ய வேண்டும்.

 

ஒரு நிதி ஆண்டில் 12,50,001 முதல் 15,00,000 வரை உள்ள வருமானத்திற்கு 1,25,000 + 12,50,001 க்கு மேலான வருமானத்தில் 25 சதவீத வருமான வரியை அந்தந்த வங்கிகளே ஆட்டோ டெபிட் செய்ய வேண்டும்.

 

ஒரு நிதி ஆண்டில் 15,00,001 க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 1,87,000 + 15,00,001 க்கு மேலான வருமானத்தில் 30 சதவீத வருமான வரியை அந்தந்த வங்கிகளே ஆட்டோ டெபிட் செய்ய வேண்டும்.




 

ஆகவே, வருமான வரி சட்டத்தை சரியாகவும், சமமாகவும், ஏமாற்ற முடியாத அளவிலும், கடுமையாகவும் அமல்படுத்தினாலே போதும் கறுப்புப் பணத்தை எளிமையாக ஒழித்து விடலாம்.

No comments:

Post a Comment