Inaiya Sevaigal: வருமான வரி னு சொல்லாதீங்க சம்பள வரி னு சொல்லுங்க! - ஏன்? - சிறுகதை

வருமான வரி னு சொல்லாதீங்க சம்பள வரி னு சொல்லுங்க! - ஏன்? - சிறுகதை


வருமான வரி னு சொல்லாதீங்க சம்பள வரி னு சொல்லுங்கள்!

 

                என்னங்க இப்படி சொல்றேன்னு பார்க்குறீங்களா? கதையை படிங்க அப்புறம் நீங்களும் அப்படித்தான் சொல்வீங்க!

 

                பூவிழி ஒரு நாலு பவுனு வர அளவுக்கு நகை கொஞ்சம் ரெடி பண்ணிக் கொடேன் என்று சொல்லிக்கொண்டு உள்ளே வந்தார் நகுலன். நகுலன் ஒரு பி கிரேடு அரசு ஊழியர். அவரின் இல்லத்தரசி பூவிழி.

                ஏன்ங்க கேட்கிறீங்க னு கேட்டார் பூவிழி.

                ஒன்னும் இல்ல மா இது பிப்ரவரி மாசம் இல்ல. அதான் வருமான வரி ஒரு லட்சம் வந்திடுச்சி. ஒரு லட்சத்தை பிப்ரவரி மாச சம்பளத்துல புடிக்கிற அளவுக்கு எனக்கு சம்பளம் இல்லையாம். அதனால ஒரு லட்சத்தை ஆடிட்டர் போய் கட்டிட்டு ரசீது கொண்டு வந்து கொடுத்திடுங்கனு ஆஃபிஸ்ல சொல்லிட்டாங்க. அதனால் தான் நகையை அடமானம் வச்சி ஒரு லட்சம் ரெடி பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன். என பொறுமையாக சொன்னார் நகுலன்.

                என்னங்க சொல்றீங்க ஒரு லட்சம் வருமான வரியா? என்று வியந்து கேட்டார் பூவிழி.

                ஆமாம்மா என சலிப்புடன் சொன்னார் நகுலன்.

                ஏன்ங்க இந்த வருமான வரியை கட்டலைன்னா என்னங்க பண்ணுவாங்க! என கேட்டார் பூவிழி.

                வருமான வரியை கட்டலைன்னா சம்பளம் கொடுக்க மாட்டாங்க மா என சொன்னார் நகுலன்.

                உங்களுக்கு ஒரு லட்சம் தான் வருமான வரி வருதுன்னு எப்படிங்க கரெக்ட்டா சொல்றீங்க. என்றார் பூவிழி.

                மாசம் மாசம் சம்பளத்தை கணக்குப் பார்த்து பேன்ங்க்ல போடுறாங்கள்ள. அந்த கணக்கை வச்சித் தான் வருமான வரி வரும்மா  என்றார் நகுலன்.

                ஏன்ங்க கணக்கை மாத்தி எழுத முடியாதுங்களா? என்றார் பூவிழி.

                அதுலாம் முடியாதுப்பா? ஒரு ரூபாயா இருந்தாலும் கணக்குப் பார்த்துத் தான் சம்பளம் போடுவாங்க. அவங்க ஒரு ரெஜிஸ்டர் வச்சிருப்பாங்க அதுல யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தோம்னு எழுதி வச்சிருப்பாங்க. பொய் கணக்குலாம் எழுத முடியாதுப்பா!  அதனால நாம எவ்வளவு சம்பளம் வாங்குறோமோ அவ்வளவு சம்பளத்துக்கு ஏற்ற வருமான வரியை கட்டித்தான் மா ஆகுனும். நம்ம நாட்டுல இரண்டரை லட்சம் வரைக்கும் தான் வருமான வரி கிடையாது. அதுக்கு மேல வர வருமானத்துக்கு எல்லாம் வருமான வரி கட்டித்தான் ஆகனும். அது மட்டும் இல்லம்மா! எங்கள மாதிரி அரசு ஊழியர்கள் ஃபைல் பண்றது கட்டாயம்.  என்றார் நகுலன்.

                அப்படிங்களா? ஃபைல்னா என்னாங்க என்றார் பூவிழி.

                இப்ப நம்ம பையன் மேல் படிப்புக்காக நான் மாசம் மாசம் ஆர்டி கட்டிக்கிட்டு வரேன்ல அதுக்கு வட்டி வரும் ல அந்த வட்டிக்கும் வருமான வரி உண்டும்மா என்றார் நகுலன்.

                என்னங்க கொடுமையா நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறீங்க. அதுக்கு வருமான வரியும் கட்டிடுறீங்க. நீங்க கஷ்டப்பட்டு சேமிக்கிற பணத்துக்குமா வரி கட்டனும். என்று வியந்து கேட்டார் பூவிழி.

                அட ஆமாம்மா என்று சிரித்தபடி பதில் அளித்தார் நகுலன்.

                அது சரிங்க நீங்க மாசம் மாசம்  இவ்வளவுஆர்டி கட்டுறீங்கனும் அதுக்கு இவ்வளவு வட்டி வருதுன்னும் நீங்க சொல்லாம இருந்தால் அவங்களுக்கு எப்படிங்க தெரியும். அவங்க எப்படி வருமான வரி கேட்பாங்க என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் பூவிழி.

                நம்ம சொல்லனும் னு அவசியம் இல்லம்மா. அரசு ஊழியர்கள் ஃபைல் பண்றது கட்டாயம்னு சட்டம் இருக்கு மா. அப்படி ஃபைல் பண்ணும் போது நம்ம பான் எண்ணுல வேறு எதாவது வழில வருமானம் வந்திருக்கான்னு கம்ப்யூட்டர் பார்க்கும். அப்படி எதாவது வழில வருமானம் வந்திருந்தால் அதுக்கும் பொருத்தமான வருமான வரியை கட்டச் சொலலும். நாமளும் கட்டனும் இல்லைனா உரிய தண்டைத்தான் கிடைக்கும். என்றார் நகுலன்.

                அப்படினா முதல்ல நீங்க வருமான வரியை சரியா கட்டிடுங்க என்றார் பூவிழி.

                ஏன்ங்க அப்படினா எனக்கு இப்ப நிறைய சந்தேகம் வருதுங்க! கேட்கட்டுங்களா என்றார் பூவிழி.

                கேளும்மா என்றார் நகுலன்.

                எங்க அண்ணன் 50 ஆயிரத்துக்கு ஒரு பிளாட் வாங்கி இருந்தார்ல. அதை அவரு பொண்ணு கல்யாணத்துக்கு 50 லட்சத்துக்கு வித்தாரு. ஆனா அவரு எந்த வருமான வரியும் கட்டலை எந்த இ ஃபைலும் பண்ணலையே! என்றார் பூவிழி.

                இல்லம்மா விக்கிம் போது முத்திரைத் தாள் கட்டணம்னு வசூல் பண்ணிருப்பாங்க மா என்றார் நகுலன்.

                ஆமாம்ங்க. எங்க அண்ணன் வித்தது பிளாட் 50 லட்சம்னு. ஆனா அவங்க ரெஜிஸ்டர் பண்ணது பிளாட் 5 லட்சம்னு தான். என்றார் பூவிழி.

                அது மட்டுமா? எங்க மாமா ஊர்ல தேக்கு தோப்பு போட்டிருந்தார் ல அவரு ஒரு மரத்தை அம்பதாயிரம்னு நூறு மரத்தை அம்பது லட்சத்துக்கு வித்தாராம். ஆனா அவரு எந்த வருமான வரியும் கட்டலை. எந்த ஃபைலும் பண்ணலையே!

                எங்க மாமா பொங்கலுக்கு ஒரு ஆடு 20 ஆயிரம்னு  50 ஆட்டை 10 லட்சத்துக்கு வித்தாரு அவரு எந்த வருமான வரியும் கட்டலை எந்த இ ஃபைலும் பண்ணலையே!

                ஸ்டாம்ப் சேக்கிற பழக்கம் மாதிரி எங்க அத்தைக்கு நகை சேக்கிற பழக்கம் இருக்கும் உங்களுக்கே தெரியும். அவங்க சேர்த்து வச்ச நகையெல்லாம் ஒரு நகைக்கடைல வித்து 30 லட்சம் வாங்குனாங்க. அவங்க எந்த வருமான வரியும் கட்டலை. எந்த ஃ பைலும் பண்ணலையே.

                அதெல்லாம் விடுங்க! எங்க ஊர்ல இருக்க வட்டிக் கடைக்காரர் தினமும் வட்டிக்கு விடுறார். தினமும் வசூல் செய்றார். மாசம் மாசம் 10 லட்சம் சீட்டு நடத்துறார். அவரும் வருமான வரியும் கட்டுறது இல்லை. இ ஃபைலும் பண்றது இல்ல. 8 லட்சம் 7 லட்சம் னு அவருக்கிட்ட ஏலச் சீட்டு எடுக்கிறாங்களா? அவங்களும் வருமான வரியும் கட்டுறதை இல்லை. இ .ஃபைல் பன்றது இல்லையே!

                என் தம்பி மளிகை கடை நடத்துறான். மாசம் 5 லட்சம் லாபம் மட்டும் வருதுன்னு சொல்றான். அவன் எந்த வருமான வரியும் கட்டுறது இல்ல. எந்த இ ஃபைலும் பன்றதில்லையே.

                எங்க அக்காவும் மாட்டுப் பண்ணை வச்சிருக்கு. பால், தயிர், வெண்ணெ, நெய், ஸ்வீட் னு எல்லாம் தயாரிச்சி விக்குது. லாபம் மட்டும் 4 லட்சம் வருதுன்னு சொல்லுது. அவங்களும் எந்த வருமான வரியும் கட்டுறது இல்லை. எந்த இ ஃபைலும் பன்றது இல்லையே.

                என அடுக்கிக் கொண்டே போனார் பூவிழி.

                வாயடைத்து அமர்ந்திருந்தார் நகுலன்.

                பொறுமையாக சொன்னார். நான் கட்டுறதுக்குப் பேரு வருமான வரி இல்லை. சம்பள வரி. என்று.

                அப்படின்னா வருமான வரியை வருமான வரின்னு சொல்றதுக்கு என்ன தான்ங்க வழி என்று கேட்டார் பூவிழி.

                அதற்கு பதில் அளிக்க ஆரம்பித்தார் நகுலன். முதல்ல என்ன செய்யனும்னா வருமான வரி உச்ச வரம்பு ஆன 2 லட்சத்து 50 ஆயிரம் வரைக்கும் தான் ரொக்கப் பண பரிமாற்றம் னு சட்டம் கொண்டு வரனும். 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல ரொக்கப் பண பரிமாற்றம் செய்றது தண்டனைக்குரிய குற்றம் னு சட்டம் கொண்டு வரனும். 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல நடைபெறும் பணப் பரிமாற்றும் அனைத்தும் டிடி யாகவோ, செக் ஆகவோ, அக்வுன்ட் டிரான்ஸ்ஃபர் ஆகவோ என வங்கி வழியாகத் தான் நடைபெற வேண்டும் னு சட்டத்தை கடுமையாக்கனும்.. அப்படி வங்கி வழியா நடைபெறும் போது  ஒவ்வொருவருக்கும் வரும் வருமானம் ஆனது அவரவர் பான் எண்ணில் வரவு வைக்கப்பட்டு விடும். வருமான வரி உச்ச வரம்பான 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல் நடைபெறும் பணப்பரிமாற்றத்திற்கு உண்டான வருமான வரியை அப்போதே வங்கியால் வசூலிக்கப்படல் வேண்டும்.

                உராரணமாக ஒருவர் ஒரு பொருளை 6 லட்சத்துக்கு விற்கிறார் என்று வைத்துக் கொள்வொம். அவர் பெறும் வருமானம் 6 லட்சம். அவர் அந்த 6 லட்சத்தை ரொக்கப்பணமாக பெற முடியாது என சட்டம் இருப்பதாக எடுத்துக்கொள்வோம். கண்டிப்பாக வங்கி வழியாகத்தான் பெற வேண்டும் என சட்டம் இருப்பதாக எடுத்துக்கொள்வோம். அவர் அந்த 6 லட்சத்தை அவர் வங்கி கணக்கில் பெற்றுக்கொள்கிறார் என எடுத்துக்கொள்வோம். உடனே வங்கியானது அவரது வங்கி கணக்கில் இருந்து வருமான வரி என 33,800 ரூபாயை பிடித்தம் செய்து கொள்ள வேண்டும். 33, 800 எப்படினு கேட்கிறீங்களா? நமக்கு பிடிக்கிறாங்களா? அதே ரூல்ஸ் தான்ங்க.

1 -2,50,000                         -               Nil Tax               -               0                             -               0            

2,50,001 – 5,00,000       -               5%                          -               2,50,000             -               12,500

5,00,001 – 10,00,000     -               20%                       -               1,00,000             -               20,000

                                                                                                                கூடுதல்             -               32,500

                                                                                                4 சதவீத கல்வி வரி     -               1300

                                                                                                ஆகக் கூடுதல்              -               33,800

                அது மட்டும் இல்லீங்க. இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் இ ஃபைல் செய்வது கட்டாயம் என சட்டம் கொண்டு வர வேண்டும். நாம கஷ்டப்பட்ட மாதம் மாதம் சேமிச்சா? இ ஃபைல் பண்ணும் போது உங்களுக்கு 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல வருமானம் வந்திருக்கு உங்களோட சேமிப்புக்கு இவ்வளவு வட்டி வாங்கி இருக்கீங்க. அதுக்கு நீங்க இவ்வளவு வரி கட்டியாகனும்னு கம்ப்யூட்டர் சொல்லுதுங்கிள்ள அதே போல் இந்தியக் குடிமகன் ஒவ்வொருத்தருக்கும் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல வருமானம் இருந்தால் அவங்களுடைய சேமிப்போட வட்டிக்கும் வருமான வரி இவ்வளவு ன்னு அதே கம்ப்யூட்டரை கண்டு பிடிச்சி சொல்ல வைக்கனும்..

                ஆக இந்தியக் குடிமகன் அனைவருக்கும் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல வருமானம் வந்திச்சினா வருமான வரி பிடித்தம் செய்றதும் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல சேமிப்பின் மூலம் வட்டி பெற்றிருந்தால் இ ஃபைல் ல கண்டுபிடிச்சி அதுக்கும் வருமான வரி பிடித்தம் செய்றதும் நடந்துச்சினா அது தான்ங்க உண்மையான வருமான வரி.

                அப்பதான்ங்க அதை வருமான வரி னு சொல்ல முடியும்.

                செய்வாங்களா? என மூச்சி விடாமல் பேசி முடித்தார் நகுலன்.

                நகுலனோட கேள்விக்கு உங்க பதில் என்னங்க.! தயவு செய்து சொல்லுங்க!.

No comments:

Post a Comment