Inaiya Sevaigal: IFHRMS ல் Pay Slip ஓபன் ஆகவில்லையா? எவ்வாறு பாஸ்வேர்ட் ரீ செட் செய்வது?

IFHRMS ல் Pay Slip ஓபன் ஆகவில்லையா? எவ்வாறு பாஸ்வேர்ட் ரீ செட் செய்வது?


கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.


தற்போது தோன்றும் பக்கத்தில் யூசர் ஐடி என்ற இடத்தில் உங்களது 11 இலக்க எம்ப்ளாய் ஐடி யை உள்ளிடுங்கள். எம்ப்ளாய் ஐடி யை அறிந்துகொள்ள IFHRMS லிருந்து உங்கள் மொபைலுக்கு பே சிலிப் தயாராக உள்ளது டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் என மெஸேஜ் வரும். அதில் உங்களது எம்ப்ளாய் ஐடி இருக்கும். உதாரணமாக கல்வித்துறையாக இருந்தால் 430 என ஆரம்பிக்கும். ஆதிதிராவிடர் நலத்துறையாக இருந்தால் 040 என ஆரம்பிக்கும். வருவாய்த்துறையாக இருந்தால் 410 என ஆரம்பிக்கும்.

அதற்கு கீழே உள்ள பெட்டியில் டெக்ஸ்ட் வெரிபிகேசன் என இருக்கும். அந்த இடத்தில் பெட்டிக்கு மேலே தெரியும் 4 இலக்க எண்ணை உள்ளிடுங்கள்.

தற்போது வெரிஃபை பட்டனை அழுத்துங்கள்.

தற்போது தோன்றும் பக்கத்தில் Update password using otp அல்லது Update password using security question என இருக்கும்.

அதில் Update password using otp என்பதை க்ளிக் செய்யுங்கள்.

தற்போது உங்கள் மொபைலுக்கு 6 இலக்க ஓடிபி வரும். அதை உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.

தற்போது புதிய பாஸ்வேர்ட் ஐ உருவாக்க சொல்லும். உங்கள் பெயர் மற்றும் பிறந்த வருடம் @ சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தி குறைந்த பட்சம் 8 இலக்கத்தில் ஒரு புதிய பாஸ்வேர்ட் ஐ உருவாக்கிக் கொள்ளுங்கள்.

உதாரணமாக உங்கள் பெயர் கோபி. பிறந்த வருடம் 1985 என்றால் பாஸ்வேர்ட் ஐ Gopi@1985 என்று உருவாக்கிக்கொள்ளுங்கள். முதல் எழுத்து மட்டும் கேப்பிட்டல் லெட்டராக இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள். 

தற்போது சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.

தற்போது சில செக்யூரிட்டி கொஸ்டின் வரும். அதில் உங்களுக்கு பிடித்த கொஸ்டினை தேர்வு செய்து அதற்கு உரிய பதிலை கீழே உள்ள பெட்டியில் டைப் செய்து சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.

உங்களது IFHRMS Page ஒபன் ஆகிவிடும். தற்போது மேலே உள்ள ரிப்போர்ட்ஸ் என்ற பட்டனை அழுத்துங்கள்.

தற்போது பே சிலிப் என்பதை தேர்வு செய்யுங்கள்.

தற்போது மாதத்தை தேர்வு செய்து பே சிலிப் ஐ ஜெனரேட் செய்யுங்கள்.

தற்போது ஓபன் ஆகும் சிப் ஃபைலை இரண்டு முறை  எக்ஸ்ட்ராக் செய்தால் பிடிஎஃப் ஆக ஓபன் ஆகும்.

தற்போது பாஸ்வேர்ட் கேட்கும். அதில் உங்களது பிறந்த தேதியை ஸ்லாஷ் (/) இல்லாமல் உள்ளிட்டால் பே சிலிப் ஓபன் ஆகிவிடும். உதாரணமாக உங்களது பிறந்த தேதி 16/05/1985 எனில் 16051985 என உள்ளிட்டால் ஓபன் ஆகிவிடும்.

No comments:

Post a Comment