தமிழக அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் புது வீடு கட்டுவதற்கோ, ஏற்கனவே கட்டிய வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பை சொந்தமான வாங்க வேண்டும் என்றாலோ அதற்கு முன்பணம் கொடுக்கப்படும்.
தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புதிய வீடு கட்ட உதவி புரியும் விதத்தில் அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் அரசுத் துறை பணியாளர்கள் வீடு கட்டுவதற்கும், கட்டிய வீட்டை வாங்குவதற்கும், அடுக்குமாடி குடியிருப்பினை சொந்தமாக்கி கொள்வதற்கும் முன்பணம் கொடுக்கப்படும்.
வீடு கட்ட விரும்பும் ஊழியர்களுக்கும், கட்டிய வீடுகளை வாங்க விரும்பும் பணியாளர்களுக்கும் வீடு கட்டும் முன்பணத்தினை அரசு வழங்கும். இந்த முன்பணமாது அனைத்து மத்திய மற்றும் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அவர்களது ஊதிய அளவிற்கேற்ப ரூ. 60 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை கொடுக்கப்பட இருக்கிறது.
இப்பணத்தில் 50% வீட்டு மனை வாங்குவதற்கும், மற்ற 50% வீடு கட்டுவதற்கும் வழங்கப்படும். இச்சலுகை பணி மற்றும் நுழைவுப் பதவியில் தகுதிகாண் பருவம் முடித்த அரசு ஊழியர்களுக்கானதாகும். அரசு ஊழியர்களுக்கான இந்த கடன் சேவைகள் மத்திய அரசு பணியாளர்களுக்கு ரூ.20 லட்சம் மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் வரை இதுவரை கொடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் வீடு கட்டுவதற்காக வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளவர்கள், அதை அரசின் முன் பணமாகவும் மாற்றிக் கொள்ளும் வகையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தற்போது அரசு வழங்கும் முன் பணத்தொகை, முதலில் 180 தவணைகளாக அசல் தொகை பிடித்தம் செய்யப்படும். பின்னர் 60 தவணைகளில் வட்டி பிடித்தம் செய்யப்படும். இந்த கடனை பெற்றுள்ள அரசு ஊழியர் பணியின் போது இறக்க நேரிட்டால், ‘அரசுப் பணியாளர் வீடு கட்டும் முன்பண சிறப்பு குடும்ப சேமநல நிதித் திட்டம்’ என்பதன் கீழ் ஊழியரின் ஊதியத்தில் இருந்து, மாத தவணைத் தொகையில் 1% பிடித்தம் செய்யப்படும். இதற்காக ரூ.160 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர தலைமைச் செயலகத்தின் துறைகளுக்கும் தனித்தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இடம் வாங்கி வீடு கட்டுவதென்றால் இடத்திற்கும் வீட்டிற்கும் சேர்த்து மதிப்பீடு பெற்று விண்ணப்பம் தயார் செய்ய வேண்டும்.
இடம் தமது சொந்த பணத்திலும் வீடு முன்பணம் மூலமாகவும் வீடு கட்டுவதென்றால் இடம் வாங்குவதற்கு முன் ஊதியம் வழங்கும் அலுவலரிடம் அனுமதி பெற்று நிலம் வாங்கிய விவரத்தை தங்களது பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
பிறகு தங்களின் ஊதியம் வழங்கும் அலுவலர் மூலமாக கீழ்க்கண்ட விண்ணப்பத்தை தயார் செய்து ஊதியம் வழங்கும் அலவலரின் கையொப்பம் பெற்று பணிநியமன அலுவலர் மூலமாக தாங்கள் பணிபுரியும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தாங்கள் பணிபுரியும் மாவட்ட ஆட்சித் தலைவர் தனது ஆளுகைக்குட்பட்ட இடத்தில் நீங்கள் வீடு கட்டுவதாக இருந்தால் உரிய அனுமதியை வழங்குவார். நீங்கள் வீடு கட்டும் இடம் வேறு மாவட்டமாக இருந்தால் அம்மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உங்களது விண்ணப்பத்தை பரிந்துரை செய்வார். அவர் உங்களுக்கு அனுமதியை வழங்குவார்.
வீடு கட்டப்பட உள்ள இடம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு விண்ணப்பிக்க வேண்டிய விண்ணப்பப் படிவம்
தமிழக அரசு ஊழியர்கள் வீடு கட்ட முன்பணம் பெறுவதற்கான அரசாணை
this file not downdoad
ReplyDeleteNow we can download it
ReplyDelete