அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது அவர்களுக்கு ஓய்வூதியம்
வழங்கும் போது அரசுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஓய்வூதியம் வழங்கும் வழிமுறைகள் – ஆய்வறிக்கை
நோக்கம்:
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது அவர்களுக்கு ஓய்வூதியம்
வழங்கும் போது அரசுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஓய்வூதியம் வழங்கும் வழிமுறைகளை கண்டறிதல்.
பிரச்சினையை வரையறுத்தல்:
தமிழக அரசின் தற்போதைய நிதி நிலை மிகவும் கடினமான
நிலையில் உள்ளதாலும் மிகுந்த கடன் சுமையில் உள்ளதாலும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்
போது அவர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை அரசுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வழங்கும் வழிகளை கட்டமைத்தல்.
பிரச்சினைக்கான தீர்வுகளை ஆராய்தல்:
பெரும்பாலான அரசு ஊழியர்கள் தாங்கள் ஓய்வு பெற்றவுடன் தங்களுக்கு
கிடைக்கும் பணப்பலன்களை கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு வழியில் தான் செலவிடுவார்கள்.
1.
வீடு அல்லது நிலம் வாங்குதல்
2.
வீடு கட்டுதல்
3.
தங்களுடைய மனைவி, மகன்
அல்லது மகள் அல்லது பேரக்
குழந்தைகளுக்கு பிரித்து
கொடுத்தல். அல்லது மகன், மகள், பேரக்
குழந்தைகளுக்கு திருமணம்
செய்து வைத்தல்.
4.
வங்கி அல்லது அஞ்சலகத்தில் வைப்புத்தொகையாக வைத்தல்.
5.
மாதாந்திர வருவாய் திட்டத்தில் முதலீடு செய்தல்.
ஆகவே மேற்கண்ட வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் தான் செலவிடுவார்கள். அவ்வழிகளையும்
அவர்களின் விருப்பத்திற்கும் ஏற்றவாறு பணப்பலன்களை வழங்குவதால் அரசுக்கும் நிதிச்சுமை
ஆகாது. அரசு ஊழியர்களுக்கும் பயனளிக்கும். அரசுக்கும்
நற்பெயர் ஏற்படும்.
பிரச்சினைக்கான முடிவை கண்டறிதல்:
மேற்கண்ட வழிகளிலிருந்து நாம் ஒரு முடிவுக்கு வரலாம். சிலருக்கு
பணப்பலன்கள் முழுமையாக தேவைப்படுகிறது. சிலருக்கு வைப்புத்தொகையாக
இருந்தால் போதுமானது. ஆகவே ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் விருப்பத்தை அவர்களின்
அவசியத்தை முதலில் அறிவது சிறந்தது.
ஓய்வுபெறும் அரசு ஊழியர்களிடம் பணப்பலன்களை பணமாக பெற்றுக்கொள்கிறீர்களா? அல்லது
வைப்புத் தொகையாக பெற்றுக்கொள்கிறீர்களா? என விருப்பக்கடிதம்
பெறுவது சிறந்தது.
அரசு ஊழியர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பணப்பலன்களை வழங்குவதே
சாலச்சிறந்தது.
பணப்பலன்களை முழுமையாக பணமாக வழங்க நடைமுறைப்படுத்தும் வழிகளை
கண்டறிதல் :
பணப்பலன்களை முழுமையாக அரசு ஊழியர்கள் பெற விரும்பும் போது
அவர்களுக்கான மொத்த தொகையை கணக்கிட்டு அவற்றை மூன்று சம தவணைகளாகப் பிரித்து மூன்று
தவணைகளில் வழங்கலாம். அதாவது
2021 ல் முதல் தவணை, 2022 ல்
இரண்டாவது தவணை 2023 ல் மூன்றாவது தவணை என மூன்று ஆண்டுகளில் முழுமையாக வழங்கலாம்.
பணப்பலன்களை வைப்புத் தொகையாக வழங்க நடைமுறைப்படுத்தும் வழிகளை
கண்டறிதல் :
முதலில் தமிழக அரசு ஏதேனும் ஒரு வங்கி அல்லது அஞ்சல் துறையுடன்
ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். அந்த
ஒப்பந்தத்தில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணப்பலன்களை மிகப்பெரிய அளவில் தங்களுடைய
வங்கி அல்லது அஞ்சலகம் வழியாக நடைமுறைப்படுத்தும் போது குறிப்பிட்ட சதவீதம் அளவிலான
தொகையை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். அதாவது அரசு ஊழியர்களுக்கு
வழங்கப்படும் வட்டி வீதம் ஆனது ரிசர்வ் வங்கியின் நெறிமுறைப்படி நடைமுறையில் உள்ள வட்டி
வீதம் வழங்கப்படல் வேண்டும்.
அதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால்
ஒரு பெரும் தொகையை அவ்வங்கி அல்லது அஞ்சலகத்தில் செலுத்தப்படுவதால் அவ்வங்கி அல்லது
அஞ்சலகத்திற்கு பெரும் தொகை வரவாக வருவதால் குறிப்பிட்ட சதவீதத்திலான தொகையை தமிழக
அரசுக்கு வழங்க முன்வரலாம்.
1.
முதலில் வைப்புத் தொகையாக பெற விருப்பம் தெரிவிக்கும் அரசு
ஊழியர்களிடம் மேலும் சில விவரங்களை கேட்டறிய வேண்டும்.
2.
பணத்தை தங்கள் பெயரிலா அல்லது மனைவி, மகன், மகள்
அல்லது பேரக்குழந்தைகள் பெயரில் வைப்புத் தொகையாக பெற விரும்புகிறீர்களா
என கேட்டறிய வேண்டும்.
3.
யார் யாருக்கு எவ்வளவு சதவீதம் தொகையை வைப்புத் தொகையாக பெற
விரும்புகிறீர்கள் எனக் கேட்டறிய வேண்டும்.
4.
அவர்களின் விருப்பத்தின் பெயரிலும் ஒப்புதல் வாக்குமூலத்தின்
அடிப்படையிலும் அவர்கள் கோரியவாறு
வைப்புத் தொகையாக வழங்கலாம்.
5. சிலர் முழு பணத்தையும் மாதாந்திர வருவாய் பிரிவில் செலுத்த நினைப்பர். அவர்களுக்கு தமிழக அரசு அஞ்சல் துறையுடன் மேற்கண்டவாறு ஒப்பந்தம் மேற்கொண்டு அரசே அப்பிரிவில் முதலீடு செய்து அவர்களுக்கு மாதாந்திர வருவாய் கிடைக்குமாறு செய்யலாம்.
No comments:
Post a Comment