கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் முதல் பெட்டியில் இன்ஸ்டியூட் நோடல் ஆபிசர் என்பதை தேர்வு செய்யுங்கள்.
இரண்டாவது பெட்டியில் தற்போதைய கல்வி ஆண்டை தேர்வு செய்யுங்கள்.
மூன்றாவது பெட்டியில் தங்கள் பள்ளியின் எமிஸ் எண்ணை டைப் செய்யுங்கள்.
நான்காவது பெட்டியில் நேஷ்னல் ஸ்காலர்சிப் போர்டல் க்கான பாஸ்வேர்ட் ஐ டைப் செய்யுங்கள்.
ஐந்தாவது பெட்டியில் கேப்சாவை டைப் செய்யுங்கள்.
தற்போது லாக் இன் செய்யுங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் அட்மினிஸ்ட்ரேசன் என்பதை க்ளிக் செய்யுங்கள் தற்போது அதற்கு கீழே தோன்றும் அப்டேட் புரபைல் என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
தற்போது நோடல் ஆபிசர் மொபைலுக்கு ஓடிபி வரும். அதை உள்ளிடுட்டு சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் நோடல் ஆபிசர் ஆதார் எண், பெயர், பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண் ஆகியவற்றை நோடல் ஆபிசர் ஆதார் அட்டையில் எவ்வாறு உள்ளதோ அவ்வாறே டைப் செய்யுங்கள். கவனமாக ஆதார் அட்டையில் எவ்வாறு உள்ளதோ அவ்வாறே உள்ளிடுங்கள்.
தற்போது ஃபைனல் சப்மிசன் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது நோடல் ஆபிசர் ஆதார் அட்டையில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதை உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது Your profile has been updated என வரும் தற்போது CTRL + P என பட்டனை அழுத்தி பிரின்ட் அல்லது பிடிஎஃப் ஆக சேவ் செய்து கொள்ளுங்கள்.
தற்போது கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் முதல் பெட்டியில் இன்ஸ்டியூட் ஹெட் என்பதை தேர்வு செய்யுங்கள்.
இரண்டாவது பெட்டியில் தற்போதைய கல்வி ஆண்டை தேர்வு செய்யுங்கள்.
மூன்றாவது பெட்டியில் தங்கள் பள்ளியின் எமிஸ் எண்ணை டைப் செய்யுங்கள்.
நான்காவது பெட்டியில் நேஷ்னல் ஸ்காலர்சிப் போர்டல் நோடல் ஆபிசர் க்கான பாஸ்வேர்ட் ஐ யே இங்கேயும் டைப் செய்யுங்கள்.
ஐந்தாவது பெட்டியில் கேப்சாவை டைப் செய்யுங்கள்.
தற்போது லாக் இன் செய்யுங்கள்.
தற்போது இன்ஸ்டியூட் ஹெட் க்கு புதிய பாஸ்வேர்ட் உள்ளிட சொல்லும். முதலாவது பெட்டியில் இன்ஸ்டியூட் ஹெட் க்கு தாங்கள் விரும்பும் புதிய பாஸ்வேரட் ஐ டைப் செய்யுங்கள். இரண்டாவது பெட்டியில் மறுபடியும் அதே பாஸ்வேர்ட் ஐ டைப் செய்து கன்பாரம் செய்யுங்கள். தற்போது சப்மிட் பட்டனை அழுத்துங்கள். பாஸ்வேரட் வெற்றிகரமாக மாற்றப்பட்டது என செய்தி தோன்றும்.
(ஏற்கனவே இன்ஸ்டியூட் ஹெட்க்கு புதிய பாஸ்வேர்ட் உருவாக்கியுள்ளவர்கள் இதை செய்யத் தேவையில்லை. அவர்கள் நேரடியாக இன்ஸ்டியூட் ஹெட் க்கு உருவாக்கிய பாஸ்வேர்ட் ஐ உள்ளிட்டு லாக் இன் செய்து கொள்ளலாம். இன்ஸ்டியூட் ஹெட் க்கு என தனியாக புதிய பாஸ்வேர்ட் உருவாக்காதவர்கள் மட்டும் இதை செய்தால் போதுமானது.)
தற்போது கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் முதல் பெட்டியில் இன்ஸ்டியூட் ஹெட் என்பதை தேர்வு செய்யுங்கள்.
இரண்டாவது பெட்டியில் தற்போதைய கல்வி ஆண்டை தேர்வு செய்யுங்கள்.
மூன்றாவது பெட்டியில் தங்கள் பள்ளியின் எமிஸ் எண்ணை டைப் செய்யுங்கள்.
நான்காவது பெட்டியில் நேஷ்னல் ஸ்காலர்சிப் போர்டல் இன்ஸ்டியூட் ஹெட் க்கான பாஸ்வேர்ட் ஐ டைப் செய்யுங்கள்.
ஐந்தாவது பெட்டியில் கேப்சாவை டைப் செய்யுங்கள்.
தற்போது லாக் இன் செய்யுங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் அட்மினிஸ்ட்ரேசன் என்பதை க்ளிக் செய்யுங்கள் தற்போது அதற்கு கீழே தோன்றும் அப்டேட் புரபைல் என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
தற்போது இன்ஸ்டியூட் ஹெட் மொபைலுக்கு ஓடிபி வரும். அதை உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் இன்ஸ்டியூட் ஹெட் ன் ஆதார் எண், பெயர், பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண் ஆகியவற்றை இன்ஸ்டியூட் ஹெட் ஆதார் அட்டையில் எவ்வாறு உள்ளதோ அவ்வாறே டைப் செய்யுங்கள். கவனமாக ஆதார் அட்டையில் எவ்வாறு உள்ளதோ அவ்வாறே உள்ளிடுங்கள்.
தற்போது ஃபைனல் சப்மிசன் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது இன்ஸ்டியூட் ஹெட் ன் ஆதார் அட்டையில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதை உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.
தற்போது Data has been updated successfully என வரும் தற்போது CTRL + P என பட்டனை அழுத்தி பிரின்ட் அல்லது பிடிஎஃப் ஆக சேவ் செய்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment