Inaiya Sevaigal: முஸ்லிம், கிறிஸ்துவ மாணவர்கள் 1 ஆம் வகுப்பு முதல் உதவித்தொகை பெறுவது எப்படி?

முஸ்லிம், கிறிஸ்துவ மாணவர்கள் 1 ஆம் வகுப்பு முதல் உதவித்தொகை பெறுவது எப்படி?


முஸ்லிம், கிறிஸ்துவ மாணவர்களுக்கு 1 ஆம் வகுப்பு முதல் உதவித்தொகை பெறுவது எப்படி என்று பார்ப்போம்.

கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.


தற்போது தோன்றும் பக்கத்தில் கடைசியாக உள்ள நான்கு தேர்வு பெட்டிகளை டிக் செய்து Continue பட்டனை அழுத்துங்கள்.

தற்போது தோன்றும் பக்கத்தில் ஸ்டேட்டில் தமிழ்நாடு எனவும், ஸ்காலர்சிப் கேட்டகரியில் ப்ரிமெட்ரிக் ஸ்காலர்சிப்பையும் (பள்ளி மாணவர்கள்) (கல்லூரி மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்சிப் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்) நெம் இல் தங்கள் பெயரையும், ஸ்கீம் டைப்பில் ஸ்காலர்சிப் என்பதையும் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் பிறந்த தேதி, பாலினம், இமெயில் முகவரி, மொபைல் எண், தங்கள் வங்கி கணக்கு உள்ள வங்கியின் ஐஎஃப்எஸ்சி எண், வங்கி கணக்கு எண் போன்றவற்றை உள்ளிடவும்.

அதன் பின் ஐடின்டிபிகேசன் டீட்டைலில் பேன்க் ஆக்கவுன்ட் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

தற்போது உங்கள் சூஸ் ஃபைல் என்ற இடத்தில் உங்கள் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கத்தை போட்டோ வை அப்லோட் செய்யவும். போட்டோ 200 கேபி க்குள் இருக்க வேண்டும்.

தற்போது கேப்சாவை உள்ளிட்டு ரெஜிஸ்டர் பட்டனை அழுத்தவும்.

தற்போது உங்கள் மொபைலுக்கு ஒரு ஓடிபி வரும். அதை உள்ளிட்டு கன்பார்ம் ஓடிபி பட்டனை அழுத்தவும்.

தற்போது ரெஜிஸ்டர் எண் திரையில் தோன்றும். அதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அது தான் தங்களின் யூசர் நேம்.

தற்போது கீழ்க்கண்ட பக்கத்தை க்ளிக் செய்யுங்கள்.


தற்போது தோன்றும் பக்கத்தில் தங்கள் ரெஜிஸ்டர் எண்ணை உள்ளிடவும், தங்களின் பிறந்த தேதி தான் பாஸ்வேர் அதை உள்ளிடவும். (தேதி மாதம் வருடம் என்ற அடிப்படையில் ஸ்லாஷ் உடன் உள்ளிடவும் உதாரணமாக 20/10/2011)

தற்போது கேப்சாவை உள்ளிட்டு லாக் இன் பட்டனை அழுத்தவும்.

தற்போது பாஸ்வேர்டை மாற்ற சொல்லும். தங்களுக்கு வேண்டியவாறு பாஸ்வேர்ட் ஐ மாற்றிக்கொள்ளுங்கள்.

தற்போது உங்களுக்கு ஒரு ஓடிபி வரும் அதை உள்ளிட்டு கன்பார்ம் ஓடிபி பட்டனை அழுத்துங்கள்.

தற்போது மீண்டும் லாக் இன் செய்யுங்கள்.

தற்போது தோன்றும் பக்கத்தில் அப்ளிகேசன் என்பதைத் தேர்ந்தெடுங்கள். தற்போது தோன்றும் பக்கத்தில் மதம், சாதி, தந்தை பெயர், தாய் பெயர், மாத வருமானம், தாங்கள் படிக்கும் பள்ளி (பள்ளியின் பெயரை சேர்ச் பட்டனை க்ளிக் செய்து அந்த பள்ளியின் எமிஸ் எண்ணை உள்ளிட்டு தேடி தேர்வு செய்து செலக்ட் பட்டனை அழுத்தவும்) அட்மிசன் எண், பள்ளியில் சேர்ந்த வருடம், படிக்கும் வகுப்பு சென்ற வருடம் படித்த வகுப்பு, சென்ற வருடம் எடுத்த மார்க் சதவீதம், 
திருமண நிலை, மைனாரிட்டி வகை போன்ற வற்றை தேர்ந்தெடுத்து சேவ் அன்ட் நெக்ஸ்ட் பட்டனை அழுத்தவும்.

தற்போது தோன்றும் பக்கத்தில் தங்களின் மாவட்டம், வட்டம், பின்கோடு ஆகியவற்றை உள்ளிட்டு ப்ரிமெட்ரிக் ஸ்காலர்சிப் என்ற பட்டனை க்ளிக் செய்யவும். தற்போது போனாஃபைட் சர்டிபிகேட் ஐ டவுன்லோட் செய்து தங்களின் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் வாங்கி அப்லோட் செய்யும்.

தற்போது ஃபைனல் சப்மிட் பட்டனை அழுத்தவும்.

No comments:

Post a Comment