Date
குழந்தை பெயர்
Disable Ctrl+P
How to download lic premium receipt online | how to download lic premium paid certificate | download lic premium receipt | download lic premium paid certificate
ஆன்லைனில் LIC Consolidated Premium Paid Certificate பெறுவது எப்படி என்று பார்ப்போம்.
1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
https://ebiz.licindia.in/D2CPM/#Register
2. பாலிசி எண், பிரிமியத் தொகை (வரி இல்லாமல்), பிறந்த தேதி, மொபைல் எண், இமெயில் எண், பாலினம் ஆகியவற்றை உள்ளீடு செய்து Proceed பட்டனை அழுத்துங்கள்.
3. அடுத்ததாக உங்களது விவரங்களை சரிபார்க்க மற்றொரு தளத்திற்கு செல்ல OK பட்டனை அழுத்துங்கள் என்று ஒரு தேர்வு பெட்டி தோன்றும். நீங்கள் அதில் OK பட்டனை அழுத்துங்கள்.
4. அடுத்து தோன்றும் பக்கத்தில் பாஸ்வேர்ட் செட் செய்ய சொல்லும். உங்களுக்கு ஏற்ற வகையில் பாஸ்வேர்ட் செட் செய்து Submit பட்டனை அழுத்துங்கள். (ஒரு கேப்பிட்டல், ஒரு ஸ்மால், ஒரு நம்பர், ஒரு ஸ்பெஷல் எழுத்து என்பவை பாஸ்வேர்டுக்கு குறைந்தபட்ச தேவையாகும்.)
5. இப்போது உங்கள் இமெயில் முகவரிக்கு ஆக்டிவேசன் லின்க் அனுப்பப்பட்டு இருக்கும்.
6. தற்போது உங்கள் இமெயிலுக்கு வந்திருக்கும் ஆக்டிவேன் லின்க் ஐ க்ளிக் செய்யுங்கள்.
7. தற்போது உங்கள் மொபைலுக்கு ஒரு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். அந்த ஓடிபி யை உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.
8. தற்போது உங்கள் கணக்கு தயாராகிவிட்டது.
9. தற்போது உங்களது விவரங்களை உள்ளிட்டு லாக் இன் செய்யுங்கள்.
10. தற்போது தோன்றும் பக்கத்தில் நமது பாலிசி தொடர்பான அனைத்து விவரங்களும் தோன்றும்.
11. Self Policy என்பதைக் க்ளிக் செய்து நமது மற்ற பாலிசிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
12. இதே போல் நமது Spouce மற்றும் Childrens பாலிசிகளையும் சேர்த்துக்கொள்ள முடியும்.
13. தற்போது Basic Services என்ற பகுதியை க்ளிக் செய்யுங்கள்.
14. தற்போது தோன்றும் பக்கத்தில் Policy Premium Paid Certificate என்ற பகுதியை தேர்ந்தெடுங்கள்.
15. தற்போது தோன்றும் பக்கத்தில் தேவையான நிதி ஆண்டை தேர்ந்தெடுங்கள்.
16. அடுத்ததாக தேவையான பாலிசிகளை டிக் செய்யுங்கள்.
17. தற்போது Generate Statement என்ற பட்டனை அழுத்துங்கள்.
18. தற்போது Policy Premium Paid Certificate தோன்றும். அதனைப் பிரின்ட் எடுத்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment