Inaiya Sevaigal: தமிழக அரசின் தொழிலாளர் துறையில் உதவி ஆணையாளர் ஆக வேண்டுமா?

தமிழக அரசின் தொழிலாளர் துறையில் உதவி ஆணையாளர் ஆக வேண்டுமா?



தமிழக அரசின் தொழிலாளர் துறையில் உதவி ஆணையாளர் ஆக எவ்வாறு பணி நியமனம் பெறுவது என்று பார்ப்போம்.

தமிழக அரசின் தொழிலாளர் துறையில் உதவி ஆணையாளர் ஆக கல்வித் தகுதி பி.ஏ தொழிலாளர் மேலாண்மை அல்லது எம்.ஏ தொழிலாளர் மேலாண்மை அல்லது பி.ஜி.டி.எல்.ஏ தொழிலாளர் மேலாண்மை மாலை நேர படிப்பு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இப்படிப்பை சென்னையிலுள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் நடத்துகிறது. இப்படிப்பை படித்தவர்கள் மட்டுமே தமிழக அரசின் தொழிலாளர் துறையில் உதவி ஆணையாளராக பணியாற்ற முடியும். ஆக இப்படிப்பை படித்தால் அரசு வேலை உறுதி.

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை படித்தவர்கள் இப்படிப்பை படிக்க இயலும்.

விண்ணப்பத்தை நேரில் பெற விலை ரூ.200

விண்ணப்பத்தை தபாலில் பெற கூடுதலாக ரூ.50 செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்தை தபாலில் பெற விரும்புபவர்கள் ரூ.250 க்கு The director, Tamilnadu Institute of Labour studies, Chennai - 5 என்ற பெயருக்கு டிடி எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம்,

எண்.5. காமராசர் சாலை,

சென்னை - 5.

கூடுதல் விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்

Click here to view


No comments:

Post a Comment