Inaiya Sevaigal: சானிடைசர் தரமானதா? எனக் கண்டறிய பிபிசி வெளியிட்டுள்ள எளிய சோதனை

சானிடைசர் தரமானதா? எனக் கண்டறிய பிபிசி வெளியிட்டுள்ள எளிய சோதனை


முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

கிருமிநாசினி பயன்படுத்துவது என்பது நம் வாழ்வில் ஓர் அங்கமாக மாறிவிட்டது. கொரோனாவுக்கு எதிரான போரில் நமக்கு பாதுகாப்புக் கேடயம் போல கிருமிகளை நீக்கும் இந்தக் கிருமிநாசினிகளைப் பயன்படுத்துகிறோம். நம் பணியிடத்திலோ அல்லது பயணத்திலோ இதைப் பயன்படுத்துகிறோம். கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கிருமிநாசினிகளுக்கான தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு சில நிறுவனங்கள் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளன. எனவே, கிருமிநாசினி என்ற பெயரில் சில போலி பொருட்களும் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன.

சந்தையில் விற்கப்படும் சில கிருமிநாசினிகள் "99.9 சதவீத வைரஸ்களை கொல்லும்," "மணத்துடன் கூடிய கிருமிநாசினி", "ஆல்கஹால் மூலப்பொருளின் அடிப்படையிலான கிருமிநாசினி" என்றெல்லாம் விளம்பரங்களுடன் வருகின்றன.

கொரோனா வைரஸ் தாக்காமல் பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்கு ஆல்கஹால் மூலப்பொருளின் அடிப்படையிலான கிருமிநாசினிகளை பயன்படுத்துவதற்கு நாம் எல்லோரும் முன்னுரிமை தருகிறோம்.

ஆனால் நீங்கள் சரியான கிருமிநாசினியைத்தான் பயன்படுத்துகிறீர்களா? அந்தக் கிருமிநாசினிகளில் பக்கவிளைவுகள் ஏதும் இருக்கின்றனவா? இந்தக் கிருமிநாசினிகள் உங்கள் தோலுக்கு உகந்ததாக இருக்குமா? தரம் குறைந்த மற்றும் கலப்படமான கிருமிநாசினிகள் சந்தையில் கிடைப்பதால், இவையெல்லாம் முக்கியமான கேள்விகளாக உள்ளன.

எந்த கிருமிநாசினி நல்லது, எது கெட்டது என கண்டுபிடிப்பது எப்படி?

``ஒரு கிருமிநாசினி பயன்பாட்டுக்கு பொருத்தமானதா இல்லையா என்பதை நீங்களே கண்டுபிடிக்கலாம். இதற்கு ஒரு ஸ்பூன் கோதுமை மாவு எடுத்து, அதில் கிருமிநாசினியை சேர்க்க வேண்டும். மாவு ஒட்டும் தன்மைக்கு மாறினால், அந்தக் கிருமிநாசினி நல்லதல்ல. மாவு உலர்வாகவே இருந்தால், கிருமிநாசினி பயன்பாட்டுக்கு பொருத்தமானது'' என்று டாக்டர் கபூர் தெரிவித்தார்.

எந்தக் கிருமிநாசினி வாங்குவது?

முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

No comments:

Post a Comment