Inaiya Sevaigal: உங்கள் வருமான வரியை மிக எளிமையாக இ ஃபைலிங் செய்வது எப்படி?

உங்கள் வருமான வரியை மிக எளிமையாக இ ஃபைலிங் செய்வது எப்படி?



1. கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.



2. தற்போது தோன்றும் பக்கத்தில் Individual என்பதை தேர்வு செய்து சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.

3. தற்போது தோன்றும் பக்கத்தில் பான் எண், பெயர், பிறந்த தேதி, வசிப்பிட நிலை ஆகியவற்றை தேர்ந்தெடுத்து Continue பட்டனை அழுத்துங்கள்.

4. தற்போது தோன்றும் பக்கத்தில் தங்களின் சுய விபரங்களை பதிவு செய்து Continue பட்டனை அழுத்துங்கள்.

5. தற்போது தோன்றும் பக்கத்தில் தங்களின் மொபைல் எண்ணுக்கும், இமெயில் முகவரிக்கும் வரும் ஓடிபி எண்ணை உள்ளிட்டு Continue பட்டனை அழுத்துங்கள்.

6. தற்போது உங்களின் அக்கவுன்ட் உருவாகி விட்டது.

7. தற்போது கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.


8. தற்போது பான் எண், பாஸ்வேர்ட், கேப்சா ஆகியவற்றை உள்ளிட்டு உள்ளே செல்லுங்கள்.

9. தற்போது தோன்றும் பக்கத்தில் E file என்ற தொகுதியில் Income Tax Return என்பதை தேர்வு செய்யுங்கள்.

10. தற்போது தோன்றும் பக்கத்தில் Assessment Year ஐ தேர்ந்தெடுத்து, ITR Form number ல் ITR Form 1 என்பதை தேர்வு செய்து Filling type ல் Original / Revised Return என்பதை தேர்வு செய்து Submission Mode ல் Prepare and submit online என்பதை தேர்வு செய்யவும்.

11. தற்போது தங்களின் வங்கி கணக்கு விபரம் தோன்றும். அதில் Select Account for Refund credit என்பதை டிக் செய்து Continue பட்டனை அழுத்துங்கள்.

12. தற்போது தோன்றும் தேர்வு பெட்டியில் I agree என்பதை டிக் செய்து Continue பட்டனை அழுத்துங்கள்.

13. தற்போது தோன்றும் பக்கத்தில் Instructions தொகுதியில் வழிமுறைகள் இருக்கும்.

14. General Information பகுதியில் உங்களின் பொதுவான விபரங்கள் இருக்கும்.

15. Computation of Income and Tax பகுதியில் B1 ல் i ல் உங்களின் மொத்த வருமானத்தை உள்ளிடுங்கள். ii ல் உங்களின் HRA வை உள்ளிடுங்கள். IV ல் a (Standard deduction u/s ia) ல் 50,000 என உள்ளிடுங்கள். c (Professional tax u/s 16(iii)) ல் உங்களின் தொழில் வரியை உள்ளிடுங்கள்.  B3 பகுதியில் உங்களுக்கு வேறு ஏதேனும் வழியில் வருமானம் வந்திருந்தால் அதை கம்ப்யூட்டர் கண்டுபிடித்து திரையில் காண்பிக்கும். அதற்கும் தாங்கள் வருமான வரி கட்டித் தான் ஆக வேண்டும். Part C பகுதியில் 80C, 80CCC, 80CCD(1), 80CCD(1B) ஆகிய உங்களின் வருமான வரி படிவத்தில் உள்ளவாறு மொத்தத் தொகையை அந்ததந்த பிரிவுகளில் உள்ளிடுங்கள். இதே போல் 80D, 80G, 80T, 80U போன்ற பிரிவுகள் இருந்தால் அவற்றையும் உள்ளிடுங்கள். 

16. Tax details பகுதியில் உங்கள் TAN எண் விபரங்களை உள்ளிடுங்கள்.

17. Tax paid and Verification வரி விபரங்களை சரிபார்த்து Verification Option ல் உங்களுக்கு பிடித்தமானதை தேர்ந்தெடுங்கள். (e - verify யே சிறந்தது).

18. Schedule DI ல் உங்களின் பிடித்தம் விபரங்கள் தோன்றும்.

19. Schedule D ல் உங்களின் ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ் விபரங்கள் தோன்றும்.

20. Schedule G ல் உங்களின் நன்கொடை விபரங்கள் தோன்றும்.

21. தற்போது Preview and Submit பட்டனை அழுத்துங்கள்.

22. தற்போது உங்களின் இ பைலிங் அப்ளிகேசன் மற்றும் இ பைலிங் ரசீது ஆகியவற்றை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment