இதெல்லாம் ஒரு கேள்வியா ன்னு நீங்க கேட்கிறது என் காதுக்கு நல்லா கேட்குதுங்க.
ஆனால் இதுல ஒரு முக்கியமான விஷயம் இருக்குங்க அதை சொல்லத்தான்ங்க இந்த கட்டுரை.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் சாப்பிடக் கூடிய உணவு தான்ங்க பிஸ்கட்.
வெளியூர் பயணங்கள், உணவு உட்கொள்ள முடியாத இடங்கள், உணவு உட்கொள்ள முடியாத சூழ்நிலைகள், டீ காபி சாப்பிடும் போது உடல் நிலை சரியில்லாத போது என பெரும்பாலான இடங்களில் நாம் விரும்பி மட்டும் இல்லீங்க ஒரே வழினு சொல்லக்கூடிய உணவு தான்ங்க பிஸ்கட்.
சிலர் டீ காபி சாப்பிடும் போது பிஸ்கட் நனைச்சி சாப்பிடுவதையே வழக்கமா வச்சிருப்பாங்க. பிஸ்கட் நனைச்சி சாப்பிடைலன காபி குடிச்சி மாதிரியே இல்லேன்லாம் சொல்றவங்க இருக்காங்க.
பெரியவங்களை விடுங்க. குழந்தைகளையும் பிஸ்கட்டையும் பிரிக்க முடியாத உறவுகள்னு சொல்லலாம்ங்க. சாப்பாடு சாப்பிடுறாங்களோ இல்லையோ பிஸ்கட்டை கரெக்டா சாப்பிட்ருவாங்க. இதுல கரீம் பிஸ்கட், பொம்மை பிஸ்கட், சுகர் பிஸ்கட் னு வெரைட்டி ரொம் நீளம் ங்க.
அது மட்டும் இல்லீங்க பிஸ்கட் கோதுமைல செய்திறதுனால ரொம்ப உடம்புக்கு நல்லதுனு சொல்றவங்களாம் இருக்காங்க.
அவன் சாப்பாடுதான் சாப்பிட மாட்டேங்கிறான் பிஸ்கட் டாவது சாப்பிட்டு போறான் விடுங்க னு எத்தனையோ அம்மாக்களை பார்த்திருப்போம்.
அட நீங்க வேற கைகுழந்தைக்கு பிஸ்கட்டை கரைச்சி ஊட்டுறைதை கூட நாம பார்த்திரும்போங்க.
அதெல்லாம் சரி தான்ங்க. இப்ப எதுக்குங்க இதெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கீங்க. விஷயத்துங்க வாங்கனு நீங்க சொல்றதை உணர முடியதுங்க.
சரிங்க விஷயத்துக்கு வரேன்ங்க.
நீங்க டெய்லியும் சாப்பிடு பிஸ்கட் கவரை பார்த்திருக்கீங்களா.
இதென்ன கேள்வி பிஸ்கட் பேரை சொல்லி அந்தக் கலர் ல இருக்குமே அந்த பிஸ்கட்டை தான்ங்க னு தான் நாங்க கடையிலேயே கேட்போம் னு சொல்றீங்களா?
உண்மை தான்ங்க நாம எல்லோருமே அப்படி தான் கேட்டு வாங்குவோம்.
பிஸ்கட் கவர்ல வேற எதாவது பார்ப்பீங்களா?
கண்டிப்பா பார்ப்போம். மேனுபேக்சரிங் டேட், எக்ஸ்பைரி டேட், விலை இதெல்லாம் கண்டிப்பா பார்ப்போம் தானே சொல்றீங்க.
ரொம்ப நல்ல விஷயம்ங்க இந்த எக்ஸ்பைரி டேட் பார்த்து வாங்குறது நல்ல விஷயம் தான்ங்க.
வேற எதாவது பிஸ்கட் கவர்ல பார்ப்பீங்களா?
அட போங்கப்பா உங்களுக்கு வேற கேள்வியே இல்லையானு தான்னே கேட்குறீங்க.
ஒரு முக்கியமான விஷயம் இருக்குங்க.
நீங்க எந்த பிஸ்கட் வாங்கினாலும் இன்கிரிடியன்ட்ஸ் னு என்னா போட்ருக்காங்கனு பார்த்திருக்கீங்களா?
இப்ப உடனே உங்க வீட்ல இருக்க எதாவது ஒரு பிஸ்கட்டை எடுத்து பாருங்க.
ரீபைன்டு ஹோல் வீட் னு போட்டு பிராக்கட்ல மைதா னு போட்ருப்பாங்க. அது 63 சதவீதம் னு போட்ருப்பாங்க.
வெஜிடபுள் ஆயில் அல்லது எடிபிள் ஆயில் னு போட்ருப்பாங்க. பிராக்கட்ல பாம் ஆயில்னு போட்ருப்பாங்க.
இப்ப சொல்லுங்க. எல்லா பிஸ்கட் டும் டேஸ்ட்டா இருக்கிறதுக்கு காரணம் மைதாவும் பாம் ஆயிலும் தான்ங்க.
என்னாங்க பிஸ்கட் கவர்ல இருக்கிற இன்கிரிடியன்ட்ஸ் பார்த்திங்களா...?
No comments:
Post a Comment