இன்ஜினியரிங் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? என்று பார்ப்போம்.
1. கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லவும்.
https://www.tneaonline.org/user/register
2. தற்போது தோன்றும் பக்கத்தில் மாணவர் பெயர், மொபைல் எண், இமெயில் முகவரி, பிறந்த தேதி, பதினோறாம் வகுப்பு தேர்ச்சி நிலை, பாடத்திட்ட நிலை, பாஸ்வேர்ட் ஆகிய விவரங்களை உள்ளிட்டு சேவ் பட்டனை அழுத்தவும்.
3. தற்போது கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்யவும்.
https://www.tneaonline.org/user/login
4. தற்போது தோன்றும் பக்கத்தில் மாணவரின் இமெயில் முகவரி, மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை உள்ளிட்டு லாக் இன் செய்யவும்.
5. தற்போது தோன்றும் பக்கத்தில் பிரிவு 1 ல் மாணவரின் சுய விவரங்களையும், பிரிவு 2 ல் சிறப்பு ஒதுக்கீட்டு விபரத்தையும், பிரிவு 4 ல் உதவித்தொகை விபரத்தையும், பிரிவு 5 ல் பள்ளி விபரத்தையும், பிரிவு 6 ல் படிப்பு விபரத்தையும் கொடுத்து விண்ணப்பத்தின் முன்னோட்ட (பிரிவியூ) விபரத்தில் சரிபார்க்கவும்.
6. விபரத்தை சரிபார்த்த பின் விண்ணப்பக்கட்டணத்தை செலுத்தவும்.
7. தற்போது தங்களின் விண்ணப்பத்தை பிரின்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
No comments:
Post a Comment