Inaiya Sevaigal: மாதம் ரூ.5000 பென்சனாக பெறுவது எப்படி?

மாதம் ரூ.5000 பென்சனாக பெறுவது எப்படி?




ஒவ்வொரு மாதமும் ரூ.5000 பென்சனாக பெறுவது எப்படி என்று பார்ப்போம்.

திட்டத்தின் பெயர் :  அடல் பென்சன் யோஜனா

யார் சேரலாம் :  18 வயது முதல் 39 வயது வரை உள்ள யார் வேண்டுமானாலும் சேரலாம்.

எப்படி சேரலாம் : தங்களின் வங்கி கணக்கு உள்ள வங்கியிலோ அல்லது தங்கள் சேமிப்பு கணக்கு உள்ள அஞ்சலகத்திலோ சென்று அடல் பென்சன் யோஜனா திட்டப் படிவத்தை நிரப்பிக் கொடுத்து சேரலாம்.

என்னென்ன திட்டங்கள் உள்ளன : மாதம் ரூ.1000, மாதம் ரூ.2000, மாதம் ரூ.3000, மாதம் ரூ.4000, மாதம் ரூ.5000 பென்சன் வழங்கும் திட்டம் என ஐந்து திட்டங்கள் உள்ளன.

எவ்வளவு காலம் செலுத்த வேண்டும் : 60 வயது வரை செலுத்த வேண்டும்.

எப்போது முதல் பென்சன் வழங்கப்படும் :  61 வயது முதல்

முன்னரே திட்டத்திலிருந்து வெளியேற முடியுமா? :  முடியாது.

எத்தனை திட்டங்களில் சேரலாம் :  ஒருவர் ஒரு திட்டத்தில் மட்டுமே சேர முடியும்.

பிரிமியம் செலுத்தும் முறை :  வங்கி அல்லது அஞ்சலகம் சேமிப்பு கணக்கிலிருந்து தானாக பிடித்தம் செய்து கொள்வார்கள்.

பிரிமியம் செலுத்தும் விதம் :  மாதத் தவணை, காலாண்டு தவணை, அரையாண்டு தவணை என மூன்ற விதங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு முறையில் செலுத்தலாம்.

பிரிமியம் தொகை எவ்வளவு : வயதுக்கு ஏற்றாற்போலும், மாதப் பென்சன் தொகைக்கு ஏற்றாற் போலும், பிரிமியம் செலுத்தும் தவணை விதத்திற்கு ஏற்றாற் போலும் நிரிணயம் செய்யப்படும்.

உங்களின் பிரிமியத் தொகையை அறிவது எப்படி? : கீழ்க்கண்ட அட்டவணையைப் பார்க்கவும்.


பிடிஎஃப் வடிவிற்க்கு கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்யவும்.

https://drive.google.com/file/d/1AmNCEd7_Zr9IsFAVBXFjkMzWPmSspBzp/view?usp=sharing

ஒரு உதாரணம்  :\

25 வயது உள்ள நபர் மாதம் ரூ.5000 பென்சன் பெற விரும்பினால்

மாதத் தவணை எனில் ரூ. 376
காலாண்டுத் தவணை எனில் ரூ. 1121
அரையாண்டுத் தவணை எனில் ரூ. 2219

இதில் ஏதேனும் ஒன்றினை செலுத்தலாம்.


ஆக 25 வயது உள்ள ஒரு நபர் மாதம் ரூ.376 ஐ தனது 60 வயது வரை செலுத்தினால் 61 வயது முதல் ரூ.5000 பென்சனாக பெற முடியும்.

மேலும் முழுமையான விபரங்களுக்கு கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்யவும்.

https://npscra.nsdl.co.in/nsdl/scheme-details/Notification.pdf

No comments:

Post a Comment