அம்மா பஸ்ஸூக்கு லேட் ஆகுதம்மா? சீக்கிரம் சாப்பாடு செய்யும்மா! என அவசரப்படுத்தினாள் அன்புச்செல்வி. சமைச்சி முடிக்கப்போறேன் மா இரு மா என ஆசுவாசப்படுத்தினார் அன்புச்செல்வி தாயார் அற்புதம்மாள். இந்த பஸ் இல்லேன்னு அடுத்த பஸ் ல போலாமே மா என ஐடியா கொடுத்தார் அன்புச்செல்வி தந்தை அன்பழகன். இல்லப்பா இந்த பஸ் ல போனாதாப்பா காலேஜ் ஆரம்பிக்கறதுக்குள்ள போக முடியும் என விளக்கம் அளித்தாள் அன்புச்செல்வி. சாம்பார் வைத்து முடிப்பதற்குள் சிலிண்டர் தீர்ந்து போனது. அற்புதம்மாள் கடுப்பாகிப் போனார். அம்மாடி அன்பு கொஞ்சம் பொறுத்துக்கோம்மா நான் மண்ணெண்ணெய் அடுப்ப பத்த வச்சி சாம்பார் ரெடி பண்ணிடிறேன் மா என பொறுமையாக சொன்னார் அற்புதம்மாள்.
போம்மா நீயும் வேணாம் உன் சாம்பாரும் வேணாம் என கோபத்துடன் கிளம்பினாள் அன்புச்செல்வி. ஏன்ங்க உடனே கேஸ் சிலிண்டரை புக் பண்ணிடுங்களேன் என கணவரிடம் கூறினார் அற்புதம்மாள். அடுத்த சில வினாடிகளில் புக் பண்ணிட்டேன்ப்பா என பதில் கூறினார் அன்பழகன். ஏன்ங்க பணத்தையும் இப்பவே ஆன்லைன் ல கட்டிடுங்க அப்பத்தான் நாளைக்கே சிலிண்டர் கொடுத்திடுவாங்க. இல்லேன்னா அவங்க எப்ப கொண்டு வந்து கொடுப்பங்கன்னே சொல்ல முடியாதுங்க எனக் கூறினார் அற்புதம்மாள். ஏன்மா ரெண்டு நாள்ல கொண்டு வந்திடுவாங்களே என்றார் அன்பழகன். இல்லீன்ங்க போன தடவை ஒரு வாரம் ஆச்சுங்க. என் பிரன்ட் சுமதி சொன்னாள் பணத்தை ஆன்லைன்ல கட்டிட்டா உடனே டெலிவரி பண்ணிடுவாங்கலாம் என்று சொன்னார் அற்புதம்மாள். அப்படியா என ஆச்சர்யத்துடன் கேட்டார் அன்பழகன்.
அம்மாடி புக் ஆன மெஸேஜோட பேமென்ட் லின்க் கும் வந்திருக்குப் பா என கூறினார் மதியழகன். சரிங்க அப்படினா உடனே பணத்தை கட்டுங்க என கூறினார் அற்புதம்மாள். மதியழகனும் உடனே கட்டிவிட்டார். சமையலை முடித்து விட்டு இருவரும் அலுவலகம் கிளம்பினர். வீட்டை பூட்டி விட்டு கிளம்பும் போது பக்கத்து வீட்டுக்காரர் பரமசிவத்திடம் சார் சிலிண்டர் புக் பண்ணி பணமும் கட்டிட்டேன் சார். எம்ப்ட்டி சிலிண்டர் வராண்டாவில் வச்சிருக்கேன் சார். சிலிண்டர் வந்தா வாங்கி வையுங்கள் சார் என கூறினார் அன்பழகன்.
அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்தனர் இருவரும். அவர்களை வாசலில் பார்த்தவுடன் சிலிண்டர் இன்னும் வரலைப் பா என கூறினார் பக்கத்து வீட்டுக்காரர் பரமசிவம். சரி நாளைக்கு வந்திடும்னு சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தனர் அற்புதம்மாளும் அன்பழகனும். ஆனால் அடுத்த நாளும் வராததை அறிந்து சிலிண்டர் ஆபிசுக்கு போன் பண்ணி கேட்டார் அன்பழகன். ரெண்டு நாள்ல வந்திடும் சார் னு பதில் சொன்னார் சிலிண்டர் அலுவலக பெண்.
அன்பழகனிடம் பதில் சொல்லி விட்டு போனை வைத்த சிலிண்டர் அலுவலக பெண் மேனேஜரிடம் கேட்டார் சார் ஒரு ஆன்லைன் புக்கிங் சார் பில் போட்ருலாமா? இரும்மா அவரு புக் பண்ணிய போது விலை 700 ரூபாய். விலை ஏறுர மாதிரி தெரியுது. டிரைவர் இல்ல, ஸ்டாக் இல்ல, வண்டி எஃப்சி போயிருக்கு, லோடு மேன் இல்ல அப்படினு ஒரு நாளைக்கு ஒரு பதிலை சொல்லிடு னு சொன்னார் மேனேஜர். புக் பண்ணி பணம் கட்டி ரெண்டு நாளாவது சார் என பதில் சொன்னார் சிலிண்டர் அலுவலக பெண். சரி பில்லை போடு ஆனால் டெலிவரி பண்ணிடாதுன்னு பதில் சொன்னார் மேனேஜர்.
பில் இன்வாய்ஸ்டு னு மேஸேஜ் வந்ததைப் பார்த்த அன்பழகன் அம்மாடி பில் போட்டுட்டாங்க நாளைக்கு சிலிண்டர் வந்திடும் கவலைப்படாதே இன்னைக்கு மட்டும் தான் இந்த மண்ணெண்ணை ஸ்டவ் சமையல்லாம் னு ஆறுதல் கூறினார். சரிங்க என சந்தோஷப் பட்டார் அற்புதம்மாள். மேலும் இரண்டு நாளாகியும் சிலிண்டர் வர வில்லை. போன் பண்ணி கேட்ட அன்பழகனுக்கு ரெடிமேடு பதில்கள் ஒரு நாளைக்கு ஒன்றாக சொல்லப்பட்டன. அடுத்த நாள் சிலிண்டர் விலை 100 ரூபாய் உயர்வு என செய்தி வெளியானது.
அன்றிரவு உங்கள் பில் இன்வாய்ஸ்டு கேன்சல் பார் ரேட் சேன்ஞ் என வந்தது. அடுத்த சில நிமிடங்களில் உங்கள் பில் இன்வாஸ்ய்டு ரூ.800. பெய்டு ரூ.700, பேலன்ஸ் ரூ.100 என மெஸேஜ் வந்தது. நிலைமையை புரிந்து கொண்டார் அன்பழகன். காலையில் பரமசிவத்திடம் சொன்னார் அன்பழகன் சார் இன்னைக்கு கண்டிப்பா சிலிண்டர் வந்திடும் எக்ஸ்ட்ரா 100 ரூபாய் கேட்ப்பாங்க. இந்தாங்க இதை கொடுத்திட்டு வாங்கிடுங்க எனச் சொன்னார். அவர் கூறியது போல் அன்று மதியம் சிலிண்டர் வந்தது. சார் நீங்க 700 ரூபாய் கட்டிட்டீங்க. இன்னும் 100 ரூபாய் கொடுங்கனு வாங்கினார்கள் சிலிண்டர் டெலிவரி கொடுத்தவங்க. இதை முன்னரே சொன்ன அன்பழகனை ஆச்சர்யத்துடன் நினைத்துப் பார்த்தார் பரமசிவம்.
அடுத்த முறை சிலிண்டர் தீர்ந்த போது சிலிண்டரை புக் பண்ணி ஆன்லைன்ல பணம் கட்டிவிட்டு சிலிண்டர் ஆபிசுக்கு போன் பண்ணி சொன்னார் அன்பழகன். சார் நான் எக்ஸ்ட்ரா 100 ரூபாய் கொடுத்திடுறேன். எனக்கு நாளைக்கு டெலிவரி பண்ணிடுறீங்களானு?!
No comments:
Post a Comment