Inaiya Sevaigal: செயற்கை சீற்றம் - சிறுகதை (முற்றிலும் கற்பனையே)

செயற்கை சீற்றம் - சிறுகதை (முற்றிலும் கற்பனையே)

          உலக நாடுகளில் மிகச் சிறந்த வளரும் நாடுகளாக விந்தியா வும் கைனா வும் உருவாகி வந்தன. வளர்ந்த வல்லரசு நாடுகளான பேரிக்கா, கிரான்ஸ், கிட்டாலி, சங்கிலாந்து, ஐபோன் போன்ற நாடுகளையே விஞ்சும் அளவுக்கு விந்தியா வும் கைனா வும் வளர்ந்து வந்தன. உலக நாடுகளிலேயே இந்த இரு நாடுகளிடம் மட்டும் தான் மனித வளம் மிகுதியாக இருந்தது. ஆகவே அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், இராணுவம் ஆகியவற்றில் அதிக அளவில் மனித வளத்தைப் பயன்படுத்தி இரு நாடுகளும் மிக வேகமாக வளர்ந்து வந்தன. எதிர்காலத்தில் இந்த இரு நாடுகள் மட்டும் தான் வல்லரசாக இருக்க போகிறது. உலக நாடுகளின் இயக்கத்தையே இந்த இரு நாடுகள் தான் நகர்த்தப் போகின்றன. என எல்லா நாட்டு அறிஞர்களும் ஆரூடம் கூற ஆரம்பித்தனர்.
          விந்தியா இதை ஆரோக்கிய போட்டியாக நினைத்து தன்னை மேன்மேலும் மெருகூட்டி வளர்ந்து வர ஆரம்பித்தது. ஆனால் கைனா வோ தான் மட்டுமே உலக அரங்கில் முதன்மையான வல்லரசாக இருக்க வேண்டும் என ஆசை கொண்டது. எல்லா நாடுகளுமே தனக்கு இணையாக போட்டிக்கு வர இயலாது என கைனா நம்பியது. ஆனால் தனக்கு மனித வளத்திலும், அறிவியல் தொழில் நுட்பத்திலும் விந்தியா நிகரான வளர்ச்சிப் பெறுவதை கைனா விரும்பவில்லை. எப்படியாவது தனக்கு கீழ் விந்தியா வை கொண்டு வரவேண்டும் என கைனா திட்டம் தீட்டியது.
          தனது அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடலில் மிகப்பெரிய காற்றழுத்தத்தை உருவாக்கியது. அடுத்ததாக விந்தியா அருகில் மிகக்குறைந்த காற்றழுத்தத்தை உருவாக்கியது. கடலில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய காற்றழுத்தமானது சிறிது நாட்களில் புயலாக மாறியது. புயலாக மாறியதும் காற்றழுத்தம் குறைவாக இருந்த விந்தியா வை நோக்கி நகர ஆரம்பித்தது. விந்தியா வில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையம் புயல் நிலையை முன்னரே எச்சரிக்கை விடுத்தது. புயல் விந்தியாவை தாக்கியது. விந்திய அறிஞர்களின் எச்சரிக்கையாலும் விந்திய அரசின் மிகச்சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாலும் விந்தியா வில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. 
          இதே போல் விந்தியாவில் வேறோரு இடத்தில் மீண்டும் புயல் தாக்குமாறு கைனா செய்ய ஆரம்பித்தது. புயலின் மீது சந்தேகம் கொண்ட விந்திய அறிவியல் அறிஞர்கள் கடந்த 10 நாளில் கடலில் நிலவிய காற்றழுத்தத்தை அளந்தனர். அதே போல் விந்தியா பகுதியில் கடந்த 10 நாளில் நிலவிய காற்றழுத்தத்தை அளந்தனர். ஒரே நாளில் திடீரென கடலில் மிகப்பெரிய காற்றழுத்தமும் விந்தியா வில் திடீரென குறைந்த காற்றழுத்தமும் உருவானதென கண்டறிந்தனர். மேலும் கடலிலும், விந்திய நிலப்பகுதியிலும் கைனா வின் சமிக்கைகள் தென்பட்டதையும் கண்டறிந்தனர். இது கைனா வின் வேலை தான் என்ற முடிவுக்கு வந்தனர். தங்களின் அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதலில் அந்த காற்றழுத்தத்தை குறைத்து நகர விடாமல் செய்தனர். இதை கைனா அறிய விடாமலும், அதை தொடர்பு கொள்ள முடியாலும் செய்தனர் விந்திய அறிஞர்கள்.
          அதன் பின் உடனடியாக விந்திய அரசிடம் விந்திய அறிவியல் அறிஞர்கள் எடுத்துரைத்தனர். அதற்கு பதிலடியாக தாங்கள் தயாரித்த திட்டத்தையும் விந்திய அறிஞர்கள் எடுத்துரைத்தனர். மிகுந்த சிந்தனைக்குப் பிறகு விந்திய அரசும் அத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. விந்திய அறிஞர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களது வேலைகளை உடனடியாக செய்ய ஆரம்பித்தனர். பதிலடி கொடுப்பதற்கு தயாராயினர். ஆம் முதல் வேளையாக கடலில் நகர விடாமல் செய்திருந்த குறைத்த காற்றழுத்தத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்தினர். கைனா விற்கே தெரியாமல் கைனா நாட்டில் குறைந்த காற்றழுத்தத்தை உருவாக்கினர். புயலின் நகரும் வேகத்தையும் அதிகப்படுத்தினர். மிக சில மணி நேரங்களில் கைனா வை தாக்கியது புயல். விந்தியா வை விட மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டது கைனா.

நீதி :  நேர்மையான வழியில் முன்னேற்றம் காண வேண்டும். மற்றவரை அழித்து நாம் முன்னேற முற்பட்டால் அந்த அழிவு நமக்கே வந்து சேரும்.

No comments:

Post a Comment