தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்.
1. நீங்கள் வாங்கும் நகை சிறியதாக இருந்தாலும் முதலில் நகையின் மேல் BIS ஹால் மார்க் முத்திரை உள்ளதா? எனப் பாருங்கள்.
2. 916 என்று அச்சிடப்பட்டுள்ளதா? எனப் பாருங்கள்.
3. நீங்கள் வாங்கும் நிறுவனத்தின் பெயர் அச்சிடப்பட்டுள்ளதா? என பாருங்கள்.
4. நகை தயாரித்த ஆண்டு அச்சிடப்பட்டுள்ளதா? எனப் பாருங்கள்.
5. 22K என அச்சிடப்பட்டுள்ளதா? எனப் பாருங்கள்.
6. எந்த நகை வாங்க போகிறீர்களோ? அந்த நகையில் குறைந்த சேதாரம் எவ்வளவு என முதலிலேயே நேரடியாக கேட்டு விடுங்கள்.
7. டிசைன் அதிகமாக இருந்தால் சேதாரம் அதிகமாக இருக்கும். டிசைன் குறைவாக இருந்தால் சேதாரம் குறைவாக இருக்கும். எது வேண்டும் என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
8. 5 சதவீதத்திற்கும் குறைவான சேதாரம் உள்ள நகைகளை காண்பியுங்கள் என்று சொல்லிப் பாருங்களேன்!
9. முதலீட்டுக்காக தங்கம் வாங்க நினைப்பவர்கள் 24 கேரட் காயின்களை வங்கி அல்லது அஞ்சலகத்தில் வாங்குங்கள். ஏனெனில் 24 கேரட்டிற்கு சேதாரம் கிடையாது.
10. கூடுமான வரை காயின்களை சேதாரம் இல்லாத 24 கேரட் உள்ள காயின்களாக வாங்க முயற்சி செய்யுங்கள்.
No comments:
Post a Comment