வருமான வரி படிவம் சமர்ப்பிக்கும் முன் வரியை மிச்சப்படுத்தும் வழிகளை தெரிந்து வைத்துக்கொள்வோம்.
1. முதலில் நமது மொத்த வருமானத்தை விடுபடாமல் கூட்டி வைத்துக் கொள்வோம்.
2. பிரிவு 10(13)ஏ ல் வீட்டு வாடகைப் படியை கழித்துக்கொள்வோம். வீட்டு வாடகைப் படியை கழிக்கும் போது நாம் கொடுக்கும் 12 மாத வாடகைத் தொகை 1 லட்சத்தைத் தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 1 லட்சத்தை தாண்டினால் படிவம் 12பி யில் வீட்டு உரிமையாளரின் பான் எண் குறிப்பிட்டு அவரிடம் கையொப்பம் பெற்று இணைக்க வேண்டும். ஆகவே நாம் கொடுக்கும் 12 மாத தொகை 1 லட்சத்தை தாண்டாமல் கண்டிப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். நம்முடைய மாத வாடகை தொகை 8333 என கொடுத்தால் 8333 X 12 = 99996 என வரும். இதுவே சிக்கலற்ற வீட்டு வாடகைப் படி கழிவிற்கு வழி வகுக்கும்.
3. பிரிவு 16(ஐஏ) ல் 50000 ஐ கழித்துக் கொள்வோம்.
4. பிரிவு 16(3) ல் தொழில் வரி அதிகபட்சமாக 2500 கழித்துக் கொள்வோம்.
5. பிரிவு 24(பி) ல் வீட்டுக் கடன் வட்டியை கழித்துக் கொள்வோம். (இவர்கள் பிரிவு 10(13)ஏ ல் வீட்டு வாடகைப் படியை கழிக்கக் கூடாது.)
6. பிரிவு 10(14) ல் பயணப்படியை கழித்துக் கொள்வோம்.
7. பிரிவு 10(14)(2) ல் மலை வாழ் படியை கழித்துக் கொள்வோம்.
8. பிரிவு 80சி ல் 150000 வரை கழித்துக் கொள்ளலாம். இதில் என்னென்ன விவரங்களைப் பயன்படுத்தலாம் என பார்ப்போம்.
a. GPF
b. SPF & FBF
c. இன்சூரன்ஸ் பாலிசிகள்.
d. வீட்டுக் கடன் அசல்
e. தேசிய சேமிப்புப் பத்திரம்
f. 3 வருடம் உள்ள மியூச்சல் பண்டுகள்
g. 2 குழந்தைகளின் படிப்பு செலவுகள்
h. செல்வம மகள் (அ) மகன் (அ) பிபிஎஃப் (மூன்றும் ஓன்றே)
i. 5 வருட வைப்புத் தொகைகள்
j. வளர்ச்சிப் பிரிவில் முதலீடு செய்த ஷேர்கள்
k. 80சிசிடி1பி ல் சிபிஎஸ் தொகையைக் கழித்துக்கொள்ளலாம்.
இவை அனைத்தும் 150000 ஐ தாண்டக் கூடாது.
9. பிரிவு 80சிசிடி1பி ல் 50000 வரை சிபிஎஸ் கழித்துக்கொள்ளலாம். நமது மொத்தத் சிபிஎஸ் தொகையில் 50000 ஐ இங்கே கழித்து விட்டு மீதத் தொகையை 80சிசிடி1பி ல் கழித்துக்கொள்வது சிறந்தது.
10. சிபிஎஸ் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்கள் அடல் பென்சன் யோஜனா எனும் குறைந்த பிரிமியம் கொண்ட ஒரு பென்சன் திட்டத்தில் சேர்ந்து அதற்கான பிரிமியத் தொகையை 80சிசிடி1பி ல் தனியாக கழித்துக் கொள்ளலாம்.
11. பிரிவு 80 டி ல் NHIS தொகையான 2160 ஐ கழித்துக் கொள்ளலாம்.
12. பிரிவு 80 டி ல் மற்ற மருத்துவக் காப்பீட்டுத் தொகையை கழித்துக் கொள்ளலாம். 25000 தாண்டக் கூடாது.
13. பிரிவு 80இ ல் உயர்கல்வி கடனுக்கான வட்டித் தொகையை கழித்துக்கொள்ளலாம். உச்சவரம்பு இல்லை.
14. பிரிவு 80ஜி ல் நன்கொடைகளை கழித்துக் கொள்ளலாம்.
15. பிரிவு 80யு ல் மாற்றுத் திறன் 80 சதவீதத்திற்கும் அதிகம் எனில் 125000 ம் அதற்கும் குறைவு எனில் 75000 ம் கழித்துக் கொள்ளலாம்.
16. பிரிவு 80டிடி ல் இயலாத் திறன் 80 சதவீதத்திற்கும் அதிகம் எனில் 125000 ம் அதற்கும் குறைவு எனில் 75000 ம் கழித்துக் கொள்ளலாம்.
மேற்கண்ட சட்டப் பிரிவின் படி எவையெல்லாம் நமக்கு பொருந்துமோ அவற்றையெல்லாம் பயன்படுத்தி வருமான வரியை சேமித்துப் பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment