FIT INDIA MOVEMENT CERTIFICATE டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லவும்.
http://fitindia.gov.in/fit-india-school-registration/
தற்போது தோன்றும் பக்கத்தில் I have read and understood என்று தொடங்கும் உறுதி மொழி வாசகத்தின் தேர்வு பெட்டியில் டிக் செய்யவும்.
தற்போது APPLY FOR FIT INDIA SCHOOL CERTIFICATION என்ற பட்டன் ஆக்டிவ் நிலையில் தெரியும். அந்த பட்டனை க்ளிக் செய்து உள்ளே செல்லவும்.
தற்போது தோன்றம் பக்கத்தில் பள்ளியின் பெயர், பள்ளியின் இமெயில் முகவரி, பாஸ்வேர்ட் ஆகியவற்றை கொடுத்து சைன் அப் செய்யவும்.
தற்போது தோன்றும் பக்கத்தில் தலைமை ஆசிரியர் பெயர், தலைமை ஆசிரியர் தொலைபேசி எண், பள்ளி பதிவு எண் (பதிவு எண் தெரியவில்லை என்றால் எமிஸ் எண்ணை உள்ளிடவும்), பள்ளியின் பெயர், முகவரி, மாணவர்களின் எண்ணிக்கை, (Choose Board என்ற இடத்தில் Tamilnadu Board of secondary education என்பதை தேர்ந்தெடுக்கவும்) மாநிலம், மாவட்டம் ஆகியவற்றை தேர்ந்தெடுக்கவும்.
மறக்காமல் சிட்டி என்ற இடத்தில் பள்ளியின் அமைவிட ஊரை மட்டுமே குறிப்பிடவும். சிட்டி என்று கேட்டுள்ளதால் வட்டத்தையோ, அருகில் உள்ள நகரின் பெயரையோ குறிப்பிட வேண்டாம். மறக்காமல் சிட்டி என்ற இடத்தில் பள்ளியின் அமைவிட ஊரை மட்டுமே குறிப்பிடவும்.
அடுத்ததாக பின்கோடை உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்தவும்.
தற்போது NO RESULTS FOUND என்ற பக்கம் தோன்றும்.
தற்போது கீழ்க்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லவும்.
http://fitindia.gov.in/fit-india-school-registration/
தற்போது தோன்றும் பக்கத்தில் I have read and understood என்று தொடங்கும் உறுதி மொழி வாசகத்தின் தேர்வு பெட்டியில் டிக் செய்யவும்.
தற்போது APPLY FOR FIT INDIA SCHOOL CERTIFICATION என்ற பட்டன் ஆக்டிவ் நிலையில் தெரியும். அந்த பட்டனை க்ளிக் செய்து உள்ளே செல்லவும்.
தற்போது தோன்றும் பக்கத்தில் Number of Teachers trained in PE என்ற இடத்தில் 1 என தேர்ந்தெடுத்து பள்ளியிலுள்ள ஏதேனும் ஒரு ஆசிரியரின் பெயரை உள்ளிடவும்.
அடுத்ததாக விளையாட்டு மைதானம் எண்ணிக்கை என்ற இடத்தில் 1 என குறிப்பிட்டு அதன் அளவினை தோரயமாக உள்ளிடவும். அதன் வடிவத்தினையும் தேர்ந்தெடுக்கவும்.
அதன் கீழே பள்ளியில் விளையாடப்படும் விளையாட்டுக்களின் பெயர்களையும் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்ததாக விளையாட்டு வகுப்பிற்கு ஒதுக்கப்படும் நேர அளவுகளை தோராயமாக உள்ளிடவும்.
அடுத்ததாக Having all students என்ற தேர்வு பெட்டியை டிக் செய்யவும்.
அடுத்ததாக I hereby declare என்ற உறுதிமொழியை டிக் செய்து சப்மிட் பட்டனை அழுத்தவும்.
தற்போது தோன்றும் பக்கத்தில் DOWNLOAD CERTIFICATE என்பதை டவுன்லோட் செய்து பயன்படுத்திக்கொள்ளவும்.

super Gopi
ReplyDeleteforgot pass word koduththaal bad gateway enru varuthu gopi
ReplyDeleteSir please choose new registration
ReplyDelete