ஹஜ் புனித பயணிகளுக்கு உதவ ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்று பார்ப்போம்.
1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
http://103.71.18.114/webapp/khd/new_register.php
2. மொபைல் எண், பெயர், இமெயில் முகவரி, பிறந்த தேதி, பாஸ்வேர்ட், மாநிலம், மாவட்டம் போன்றவற்றை உள்ளிடுங்கள்.
3. தாங்கள் அரசு ஊழியர் எனில் Is applicant a govt. servant என்ற தேர்வு பெட்டியை டிக் செய்யுங்கள்.
4. தாங்கள் ஏற்கனவே ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டவர் எனில் Have you perform Hajj/Umrah என்ற தேர்வு பெட்டியை டிக் செய்யுங்கள்.
5. செக்யூரிட்டி கோடை உள்ளிட்டு I confirm that the information furnished above is true and correct என்ற தேர்வு பெட்டியை டிக் செய்து SUBMIT DETAILS என்ற பட்டனை அழுத்துங்கள்.
6. உங்கள் மொபைல் எண் தான் யூசர் நேம், நீங்கள் கொடுத்த பாஸ்வேர்ட் தான் லாக் இன் பாஸ்வேர்ட்.
7. தற்போது லாக் இன் செய்து உரிய விவரங்களை உள்ளிட்டு விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பிரின்ட் எடுத்து செயலர் மற்றும் செயல் அலுவலர், தமிழ்நாடு ஹஜ் குழு, ரோஸி டவர், மூன்றாம் தளம், எண்.13, மகாத்மா காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 34 என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.
No comments:
Post a Comment