அடையாறு பூங்காவிற்கு செல்ல ஆன்லைனில் புக்கிங் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
http://www.chennairivers.gov.in/onlinebooking/Register.aspx
2. தற்போது தோன்றும் பக்கத்தில் தொடர்பு நபர் பெயர், மொபைல் எண், மொத்த நபர்களின் எண்ணிக்கை, பெரியர்களின் எண்ணிக்கை, சிறியவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை உள்ளிடுங்கள்.
3. அடுத்து பச்சை வண்ணத்தில் உள்ள தேதிகளில் உங்களுக்கு விருப்பமான தேதியை தேர்ந்தெடுங்கள்.
4. தற்போது Book My Ticket என்ற பட்டனை அழுத்துங்கள்.
5. தற்போது தங்களின் இமெயிலுக்கு டிக்கெட் அனுப்பி வைக்கப்படும். அதில் நீங்கள் வருகைப் புரிய வேண்டிய தேதி, நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும்.
6. அதைப் பிரின்ட் எடுத்துக்கொண்டு நீங்கள் அடையாறு பூங்காவிற்கு செல்லலாம்.
7. அந்த டிக்கெட்டை காண்பித்து நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
No comments:
Post a Comment