ஆன்லைனில் மின் கட்டணம் (EB BILL) செலுத்துவது எப்படி என்று பார்ப்போம்.
1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
https://www.tnebnet.org/awp/userRegister?execution=e1s1
2. உடன் தோன்றும் தேர்வுப் பட்டியில் Existing Service Connection number என்பதைத் தேர்வு செய்து Enter பட்டனை அழுத்துங்கள்.
3. கீழே தோன்றும் Region என்பதில் ஒரு க்ளிக் செய்யுங்கள். தமிழகம் முழுவதும் உள்ள Region களை காண்பிக்கும். உங்களது Region ஐ தேர்ந்தெடுங்கள்.
4. உடன் தோன்றும் பக்கத்தில் Consumer Number என்ற இடத்தில் உங்களது வீட்டு மின் இணைப்பு எண்ணை உள்ளிடுங்கள். அதில் Region Code தவிர்த்து மற்ற அனைத்து எண்களையும் கொடுங்கள். உங்களுக்கு முழுவதுமாக மின் இணைப்பு எண் தெரியவில்லை எனில் ஏற்கனவே நீங்கள் மின் இணைப்பு கட்டணம் கட்டியிருந்த ரசீதில் முழுமையான மின் இணைப்பு எண் இருக்கும். அதைப் பார்த்து உள்ளிடுங்கள்.
5. மின் இணைப்பு எண்ணை உள்ளிட்டு Check detail என்ற பட்டனை அழுத்துங்கள்.
6. தற்போது உங்களின் பெயர் மற்றும் முகவரியை காட்டும். சரியாக இருந்தால் Confirm பட்டனை அழுத்துங்கள்.
7. தற்போது பெயர், இமெயில் முகவரி, பாஸ்வேர்டு, (பிறந்த தேதி, பாலினம், திருமண நிலை, தொழில்)(அடைப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கொடுக்காமலும் இருக்கலாம்.) வசிப்பிட முகவரி, மாநிலம், நாடு, பின்கோடு எண், மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிடு செய்து கேப்சாவை டைப் செய்து சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.
8. உடன் உங்கள் இமெயிலுக்கு ஆக்டிவேசன் லின்க் அனுப்பப்படும். அதை க்ளிக் செய்து ஆக்டிவேட் செய்யுங்கள்.
9. தற்போது தாங்கள் லாக் இன் செய்ய வேண்டும்.
10. தற்போது உங்களின் மின் இணைப்பு எண்ணிற்கு நேராக எவ்வளவு தொகை என்று காண்பிக்கப்படும்.
11. தற்போது Pay Bill என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
12. உரிய நெட் பேன்கிங் அல்லது டெபிட் கார்டு மூலமாக உரிய தொகையை செலுத்திவிட்டு உடன் தோன்றும் ரசீதை பிரின்ட் எடுத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment