Inaiya Sevaigal: ஆன்லைனில் பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்லைனில் பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?


ஆன்லைனில் பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்ப்போம்.



1. கீழ்க்காணும் லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html

2. உடன் தோன்றும் பக்கத்தில் Application Type என்பதில் New pan Indian Citizen Form 49A என்பதையும், Category ல் Individual என்பதையும் தேர்ந்தெடுங்கள்.

3. Title ல் திரு, திருமதி, ஸ்ரீ என்பதில் தேவையானதை தேர்ந்தெடுங்கள்.

4. Last name, First name என்பதில் உரியவற்றை உள்ளிடுங்கள்.

5. பிறந்த தேதி, இமெயில் ஐடி, மொபைல் எண் ஆகியவற்றையும் உள்ளிடுங்கள்.

6. அடுத்து தோன்றும் பக்கத்தில் Continue withe Pan application என்ற பட்டனை அழுத்துங்கள்.

7. அடுத்து தோன்றும் பக்கத்தில் Submit digitally through e -KYC & e - Sign (paperless) என்பதைத் தேர்வு செய்யுங்கள்.

8. அடுத்து Yes fees applicable என்பதைத் தேர்வு செய்யுங்கள்.

9. அடுத்து ஆதார் எண்ணை உள்ளிடுங்கள்.

10. மற்ற சுய விவரங்கள் தானாகவே இருக்கும். அடுத்து Gender ல் உரியவற்றைத் தேர்ந்தெடுங்கள்.

11. அடுத்து தந்தை பெயரை உள்ளிடுங்கள். பெண்கள் தந்தை மற்றும் கணவர் பெயரை உள்ளிட வேண்டும்.

12. அடுத்து Next பட்டனை அழுத்துங்கள்.

13. Income ல் உரியவற்றைத் தேர்ந்தெடுங்கள்.

14. அடுத்து Address ல் Residence என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

15. முகவரியை நாம் உள்ளீடு செய்ய முடியாது. ஏனெனில் ஆதாரில் உள்ளபடி தானாக எடுத்துக்கொள்ளும். ஆனால் Office Address ல் நம்முடைய வீட்டு முகவரியையே உள்ளீடு செய்து விடுங்கள். Company name என்ற இடத்தில் House என்று கொடுத்து விடுங்கள்.

16. Country code ல் இந்தியாவைத் தேர்ந்தெடுங்கள்.

17. Representative Assesee ல் No என்பதைத் தேர்ந்தெடுத்து Next பட்டனை அழுத்துங்கள்.

18. அடுத்து தோன்றும் பக்கத்தில் FOR HELP FOR AO CODE என்ற இடத்தில் Indian citizens என்பதைத் தேர்ந்தெடுங்கள், பின்பு City என்பதில் உங்கள் அருகாமையில் உள்ள நகரத்தை தேர்ந்தெடுங்கள். தற்போது தோன்றுபனவற்றில் நீங்கள் வசிக்கும் Area வைத் தேர்ந்தெடுங்கள். AO Code, Range Code உள்ளிட்ட அனைத்து கோடுகளும் தானாகவே நிரம்பிவிடும். பின் Next பட்டனை அழுத்துங்கள்.

19. அடுத்து தோன்றும் பக்கத்தில் Declaration பகுதியில் Himself/Herself என்பதைத் தேர்ந்தெடுங்கள். பின் Place ல் உங்கள் ஊரை டைப் செய்யுங்கள்.

20. தற்போது சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.

21. தற்போது நாம் கொடுத்து விவரங்கள் அனைத்தும் ஒரே பக்கத்தில் வரும். பின் Proceed என்ற பட்டனை அழுத்துங்கள்.

22. தற்போது Mode of Payment ல் தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்து பணம் செலுத்துங்கள்.

23. உடன் உரிய Acknowledgement வரும். பிரின்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். சில வாரங்களில் பான் கார்டு வீட்டுக்கு வந்து விடும்.

No comments:

Post a Comment