Inaiya Sevaigal: ஆன்லைனில் எல்ஐசி பிரிமியம் (LIC PREMIUM) கட்டுவது எப்படி?

ஆன்லைனில் எல்ஐசி பிரிமியம் (LIC PREMIUM) கட்டுவது எப்படி?



ஆன்லைனில் எல்ஐசி பிரிமியம் கட்டுவது எப்படி என்று பார்ப்போம்.



1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

https://ebiz.licindia.in/D2CPM/#Register

2. பாலிசி எண், பிரிமியத் தொகை (வரி இல்லாமல்), பிறந்த தேதி, மொபைல் எண், இமெயில் எண், பாலினம் ஆகியவற்றை உள்ளீடு செய்து Proceed பட்டனை அழுத்துங்கள்.

3. அடுத்ததாக உங்களது விவரங்களை சரிபார்க்க மற்றொரு தளத்திற்கு செல்ல OK பட்டனை அழுத்துங்கள் என்று ஒரு தேர்வு பெட்டி தோன்றும். நீங்கள் அதில் OK பட்டனை அழுத்துங்கள்.

4. அடுத்து தோன்றும் பக்கத்தில் பாஸ்வேர்ட் செட் செய்ய சொல்லும். உங்களுக்கு ஏற்ற வகையில் பாஸ்வேர்ட் செட் செய்து Submit பட்டனை அழுத்துங்கள். (ஒரு கேப்பிட்டல், ஒரு ஸ்மால், ஒரு நம்பர், ஒரு ஸ்பெஷல் எழுத்து என்பவை பாஸ்வேர்டுக்கு குறைந்தபட்ச தேவையாகும்.)

5. இப்போது உங்கள் இமெயில் முகவரிக்கு ஆக்டிவேசன் லின்க் அனுப்பப்பட்டு இருக்கும்.

6. தற்போது உங்கள் இமெயிலுக்கு வந்திருக்கும் ஆக்டிவேன் லின்க் ஐ க்ளிக் செய்யுங்கள்.

7.  தற்போது உங்கள் மொபைலுக்கு ஒரு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். அந்த ஓடிபி யை உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.

8. தற்போது உங்கள் கணக்கு தயாராகிவிட்டது.

9. தற்போது உங்களது விவரங்களை உள்ளிட்டு லாக் இன் செய்யுங்கள்.

10. தற்போது தோன்றும் பக்கத்தில் நமது பாலிசி தொடர்பான அனைத்து விவரங்களும் தோன்றும்.

11. Self Policy என்பதைக் க்ளிக் செய்து நமது மற்ற பாலிசிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

12. இதே போல் நமது Spouce மற்றும் Childrens பாலிசிகளையும் சேர்த்துக்கொள்ள முடியும்.

13. தற்போது Online Payments என்ற பகுதியை க்ளிக் செய்தால் நாம் செலுத்த வேண்டிய Premium ரினிவல் தொகை, மாதம் போன்றவற்றைக் காண்பிக்கும்.

14. தற்போது நாம் டெபிட் கார்டு அல்லது நெட் பேன்க்கிங்க் ஏதாவது ஒன்றின் மூலம் உரிய பாலிசி தொகையை செலுத்தி ரசீதை பிரின்ட் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

15. நமது இமெயில் முகவரிக்கும் பாலிசி தொகை செலுத்திய ரசீது தனியாக அனுப்பி வைக்கப்படும்.

No comments:

Post a Comment