Inaiya Sevaigal: ஆன்லைனில் சபரிமலை தரிசன டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி?

ஆன்லைனில் சபரிமலை தரிசன டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி?




ஆன்லைனில் சபரிமலை தரிசன டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி என்று பார்ப்போம்.


1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

https://www.sabarimalaq.com/SignUp

2. Sign Up பகுதியில் மொபைல் எண் அல்லது இமெயில் முகவரி, பாஸ்வேர்ட் கொடுத்து கேப்சாவை உள்ளிட்டு Register பட்டனை அழுத்துங்கள்.

3. தற்போது உங்கள் இமெயில் முகவரிக்கு ஆக்டிவேசன் லின்க் மற்றும் ஆக்டிவேசன் கோட் அனுப்பி வைக்கப்படும். அந்த லின்க் ஐ க்ளிக் செய்து ஆக்டிவேட் செய்யுங்கள்.

4. உடன் தோன்றும் திரையில் ஆக்டிவேசன் கோடை உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.

5. தற்போது தங்களது இமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் மூலம் லாக் இன் செய்யுங்கள்.

6. தற்போது தோன்றும் திரையில் பெயர், முகவரி, நகரம், பின்கோடு, மொபைல் எண், நாடு, மாநிலம், மாவட்டம், பாலினம், வயது, போட்டோ அடையாள வகை, போட்டோ அடையாள எண், மொழி, தற்போதைய புகைப்படம் ஆகியவற்றை உள்ளிடுங்கள்.

7. ஆன்லைன் தரிசன டிக்கெட்களை புக்கிங் செய்யும் போது நிலக்கல் முதல் பம்பா வரை KSRTC டிக்கெட்களையும் சேர்த்து புக் செய்ய வேண்டும்.

8. தற்போது Search Availability என்ற பகுதியில் தங்களுடன் எத்தனை நபர்கள் தரிசிக்க உள்ளனர் என்ற விவரத்தையும் எந்த மாதத்தில் தரிசிக்க உள்ளீர்கள் என்பதையும் உள்ளிட்டு Search பட்டனை அழுத்துங்கள்.

9. நீங்கள் உள்ளிட்ட மாதத்தில் தரிசன டிக்கெட் உள்ள தேதிகள் பச்சை வண்ணத்தில் தெரியும். அதில் உங்களுக்கு வேண்டிய தேதியை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

10. நீங்கள் தேதியை தேர்ந்தெடுத்தவுடன் அந்த தேதியில் உள்ள தரிசன நேரத்தை காண்பிக்கும்.

11. உங்களுக்கு தேவையான நேரத்தை தேர்ந்தெடுத்து அதன் அருகில் உள்ள Book Now பட்டனை அழுத்துங்கள்.

12. தற்போது கேப்சாவை உள்ளிட்டு Confirm My Booking பட்டனை அழுத்துங்கள்.

13. உங்களது டிக்கெட்டை பிரின்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

3 comments: