Inaiya Sevaigal: டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸை டவுன்லோட் செய்வது எப்படி?

டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸை டவுன்லோட் செய்வது எப்படி?


ஆன்லைனில் உங்கள் டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸை டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.



1. இது உங்கள் டிரைவிங் லைசென்ஸில் ஆதார் எண்ணை பதிவு செய்திருந்தால் மட்டுமே சாத்தியம் என்பதை அறியவும்.

2. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

https://digilocker.gov.in/public/websignup#!

3. உங்களது மொபைல் எண்ணை உள்ளிட்டு Continue பட்டனை அழுத்துங்கள்.

4. அடுத்து உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும் அதை 30 நொடிகளுக்குள் உள்ளீடு செய்து சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.

5. அடுத்து உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு Continue பட்டனை அழுத்துங்கள்.

6. அடுத்து உங்கள் மொபலை் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும் அதை 30 நொடிகளுக்குள் உள்ளீடு செய்து சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.

7. தற்போது உங்கள் டிஜிட்டல் பக்கம் தோன்றும்.

8. Issued Document என்ற பகுதியில் இதுவரை உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆவணங்கள் திரையில் தெரியும்.

9. உங்களுக்கு தேவையான ஆவணத்தை View கொடுத்து பார்வையிடலாம்.

10. டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கார்டு, கேஸ் இணைப்பு ஆவணம்  இது போன்று உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் பார்வையிடலாம்.

11. இதை சட்டப்பூர்வமாக்கப் பட்டு இருப்பதால். ஒரிஜினல் டிரைவிங்  லைசென்ஸ் இல்லாதவர்கள் இதையும் காவல் துறையிடம் காண்பிக்கலாம்.

12. இதே முறையை அப்ளிகேசன் மூலம் உங்கள் மொபைலிலும் செய்யலாம்.

13. Google Play Store ல் Digi Locker என்ற அப்ளிகேசன் மூலமாகவும் மேற்கண்ட முறையில் ஆவணங்களை பார்வையிடலாம்.

No comments:

Post a Comment