Inaiya Sevaigal: ஆன்லைனில் போலீஸில் புகார் அளிப்பது எப்படி?

ஆன்லைனில் போலீஸில் புகார் அளிப்பது எப்படி?


ஆன்லைனில் போலீஸில் புகார் அளிப்பது எப்படி என்று பார்ப்போம்.



1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

http://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?2

2. முதலில் மாவட்டத்தைத் தேர்ந்தெடுங்கள்.

3. பின் பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண், இமெயில் முகவரி ஆகியவற்றை உள்ளிடுங்கள்.(விருப்பம் இல்லையெனில் இவற்றையெல்லாம் உள்ளிடத் தேவையில்லை)

4. குற்றத்தின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

5. சம்பவம் நடைபெற்ற தேதியைக் உள்ளிடவும்.

6. சம்பவம் நடைபெற்ற இடத்தை உள்ளிடவும்.

7. குற்றத்தை விவரித்து உள்ளிடவும்.

8. சம்பவம் குறித்து ஏதேனும் PDF, JPG ஃபைல்களை உள்ளிட விரும்பினால் Yes என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இல்லையெனில் No என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

9. இந்த ஃபைல்கள் 50 KB க்குள் இருக்க வேண்டும்.

10. பின் Security Code ஐ உள்ளிட்டு Register பட்டனை அழுத்தவும்.

11. உடன் தோன்றும் ஒப்புகை ரசீதை பிரின்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

12. குறிப்பு: மாவட்டம், குற்றத்தின் வகை, செக்யூரிட்டி கோடு இவை மட்டுமே உள்ளிட்டால் போதுமானது. மற்றவை உள்ளீடுகள் விருப்பத்தின் பேரில் ஆனவை. தவறான புகார்கள் இந்திய குற்றவியல் சட்டத்தின் நடவடிக்கைக்கு உட்பட்டவை.

No comments:

Post a Comment