Inaiya Sevaigal: ஆன்லைனில் புதிய ரேசன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்லைனில் புதிய ரேசன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?


ஆன்லைனில் புதிய ரேசன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்ப்போம்.



1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

https://www.tnpds.gov.in/pages/registeracard/register-a-card.xhtml

2. குடும்பத் தலைவர் பெயர், தந்தை பெயர், முகவரி ஆகியவற்றை ஆங்கிலத்திலும் தமிழிலும் உள்ளீடு செய்யுங்கள். தமிழில் உள்ளிடு செய்யும் இடத்தில் ஒரு பென்சில் போன்ற உருவம் இருக்கும். அதைக் க்ளிக் செய்தவுடன் தமிழ் கீ போர்டு திரையில் சிறிய அளவில் தோன்றும். அதில் தேவையான எழுத்துக்களை க்ளிக் செய்து தேவையான பெயரை உருவாக்கி விடலாம்.

3. குடும்பத் தலைவரின் புகைப்படத்தை ஸ்கேன் செய்து JPG ஃபைலாக 5 MB க்குள் சேவ் செய்துகொள்ள வேண்டும். அதை புகைப்படம் பதிவேற்றம் இடத்தில் பதிவேற்றம் செய்யுங்கள்.

4. மாவட்டம், வட்டம், கிராமம், அஞ்சல் குறியீடு எண், மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிடுங்கள்.

5. பின் உறுப்பினரை சேர்க்க என்ற பட்டனை அழுத்துங்கள்.

6. குடும்பத் தலைவரின் விபரங்கள் தானாகவே இருக்கும்.

7. பிறந்த தேதி, பாலினம், தேசிய இனம், உறவுமுறை, ஆதார் எண் ஆகியவற்றை உள்ளிடுங்கள்.

8. பின் உறுப்பினரை சேமி என்ற பட்டனை அழுத்துங்கள்.

9. இதே போன்று குடும்ப உறுப்பினர்களை ஒவ்வொருவராக சேமியுங்கள்.

10. அடுத்து அரசி அட்டையா?, சர்க்கரை அட்டையா?, பண்டகமில்லா அட்டையா? என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

11. அடுத்து குடியிருப்புச் சான்றிற்காக ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு புத்தகம், பாஸ்போர், வாக்காளர் அடையாள அட்டை, மின்சார கட்டண ரசீது, கேஸ் இணைப்பு புத்தகம் போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றை ஸ்கேன் செய்து JPG ஃபைலாக 1 MB க்குள் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை குடியிருப்புச் சான்று பதிவேற்றுப் பகுதியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

12. அடுத்து எரிவாயு இணைப்பு விபரங்கள், உறுதிப்படுத்தல் போன்ற தேர்வுப் பெட்டியில் தேவையான இடத்தில் டிக் செய்யுங்கள்.

13. அடுத்து பதிவு செய் பட்டனை அழுத்துங்கள்.

14. உங்களுடைய விபரங்களை சரிபார்க்க சொல்லும். சரிபார்த்து சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.

15. தற்போது தங்களின் புதிய ரேசன் கார்டுக்கான விண்ணப்பம் தோன்றும். அந்த விண்ணப்பத்தை பிரின்ட் எடுத்து உங்கள் வட்ட வழங்கல் அலுவலகத்தில் கொடுத்துவிடுங்கள்.

16. ஓரிரு வாரங்களில் உங்களுக்கு புதிய ரேசன் கார்டு கிடைத்துவிடும்.

No comments:

Post a Comment