ஆன்லைனில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் எப்படி என்று பார்ப்போம்.
1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
https://www.nvsp.in/Forms/Forms/form6?lang=en-GB
2. மாநிலம், மாவட்டம், சட்டமன்றத் தொகுதியைத் தேர்ந்தெடுங்கள்.
3. பெயர், உறவினர் பெயர், உறவுமுறை, பிறந்த தேதி, பாலினம் ஆகியவற்றை உள்ளிடுங்கள்.
4. தற்போதைய முகவரி, நகரம்/கிராமம், அஞ்சலகம், பின்கோடு, மாவட்டம், மாநிலம் ஆகியவற்றை உள்ளிடுங்கள்.
5. நிரந்தர முகவரி, நகரம்/கிராமம், அஞ்சலகம், பின்கோடு, மாவட்டம், மாநிலம் ஆகியவற்றை உள்ளிடுங்கள்.
6. உறவினர் வாக்காளர் அட்டை எண்ணை உள்ளிடுங்கள்.
7. விருப்பத்தின் அடிப்படையில் மாற்றுத் திறன் வகை, இமெயில் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிடலாம். விருப்பம் இல்லையெனில் உள்ளிடத் தேவையில்லை.
8. உங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஸ்கேன் செய்து JPG ஃபைலாக 2 MB க்குள் சேவ் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இதை Your Photograph என்ற இடத்தில் அப்லோட் செய்ய வேண்டும்.
9. உங்களுடைய ஆதார் அட்டை, பான் அட்டை, பிறந்த சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், பாஸ்போர்ட் இதில் ஏதேனும் ஒன்றை ஸ்கேன் செய்து JPG ஃபைலாக 2 MB க்குள் சேவ் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இதை Age Proof என்ற இடத்தில் அப்லோட் செய்ய வேண்டும்.
10. உங்களுடைய பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வங்கி அல்லது அஞ்சலக சேமிப்பு புத்தகம், குடிநீர் வரி ரசீது, மின் கட்டண ரசீது, தொலைபேசி கட்டண ரசீது, கேஸ் இணைப்பு ரசீது, உங்கள் முகவரிக்கு வந்த இந்த அஞ்சல் துறையின் கடிதம் இவற்றில் ஏதேனும் ஒன்றை ஸ்கேன் செய்து JPG ஃபைலாக 2 MB க்குள் சேவ் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இதை Address Proof என்ற இடத்தில் அப்லோட் செய்ய வேண்டும்.
11. அடுத்து உங்கள் ஊர், மாநிலம், மாவட்டம், எந்த தேதியிலிருந்து இங்கு வசிக்கிறீர்கள் என்ற தேதி விபரம் ஆகியவற்றை உள்ளிடுங்கள்.
12. அடுத்து தற்போதைய இடம் கேப்சாவை உள்ளிட்டு சப்மிட் பட்டனை அழுத்துங்கள்.
13. உடன் தோன்றும் ஒப்புகை ரசீதை பிரின்ட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment