Inaiya Sevaigal: ஆன்லைனில் திருப்பதி தரிசன டிக்கெட் மற்றும் தங்குமிடம் புக்கிங் செய்வது எப்படி?

ஆன்லைனில் திருப்பதி தரிசன டிக்கெட் மற்றும் தங்குமிடம் புக்கிங் செய்வது எப்படி?


ஆன்லைனில் திருப்பதி தரிசன டிக்கெட் மற்றும் தங்குமிடம் புக்கிங் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

https://ttdsevaonline.com/#/registration

2. உங்கள் பெயர், மொபைல் எண், பிறந்த தேதி, முகவரி, நகரம், மாநிலம், நாடு, பின்கோடு, அடையாள அட்டை வகை, அடையாள அட்டை எண் (இங்கு ஆதார் அட்டையைப் பயன்படுத்துவதே சிறப்பு), பாஸ்வேர்ட் ஆகியவற்றை உள்ளீடு செய்து Continue பட்டனை அழுத்துங்கள்.

3. உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளிட்டு உங்கள் கணக்கை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

4. பின் லாக் இன் செய்யுங்கள்.

5. உள்ளே சென்று Special Entry Darshan என்ற பட்டனை க்ளிக் செய்து உங்களுக்கு தேவையான தேதியை தேர்ந்தெடுத்து நெட் பேன்க்கிங் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தியவுடன் தோன்றும் டிக்கெட்டைப் பிரின்ட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

6. Accommodation என்ற பட்டனை க்ளிக் செய்து உங்களுக்கு தேவையான தேதியை தேர்ந்தெடுத்து நெட் பேன்க்கிங் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தியவுடன் தோன்றும் ரசீதைப் பிரின்ட் எடுத்த வைத்துக்கொள்ளுங்கள்.

7. உரிய தேதியில் உரிய நேரத்தில் நீங்கள் புக் செய்து கொள்ளலாம்.

8. சிரமம் இன்றி ஏழுமாலையானை தரிசிக்க வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment