Inaiya Sevaigal: ஆன்லைனில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது எப்படி?

ஆன்லைனில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது எப்படி?


ஆன்லைன் மூலமாக நமது கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.



1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

https://tnvelaivaaippu.gov.in/Empower/

2. For new user ID Registration Click here என்பதை க்ளிக் செய்யுங்கள்.

3. உடன் தோன்றும் தேர்வு பட்டியில் I Agree என்ற பட்டனை அழுத்துங்கள்.

4. பெயர், பாலினம், இமெயில் ஐடி, யூசர் ஐடி, பாஸ்வேர்ட், தந்தை பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண், பிடித்த கலர் போன்ற விவரங்களை உள்ளிட்டு Save பட்டனை அழுத்துங்கள்.

5. அடுத்து தோன்றும் பக்கத்தில் தாயார் பெயர், சாதி, சாதியின் உட்பிரிவு, சாதி சான்றிதழ் வரிசை எண், சாதி சான்றிதழ் வழங்கிய அதிகாரி, கிராமம் அல்லது நகரம், திருமண நிலை, மதம் ஆகிய விவரங்களை உள்ளிட்டு Next பட்டனை அழுத்துங்கள்.

6. அடுத்து தோன்றும் பக்கத்தில் முகவரி, மாவட்டம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

7. வேலைவாய்ப்பு அலுவலக வகையில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் அல்லது மாற்றுத் திறன் வேலை வாய்ப்பு அலுவலகம் அல்லது சென்னை தொழிற்கல்வி வேலை வாய்ப்பு அலுவலகம் இதில் தேவையான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

8. தாலுக்கா, ஏரியா, பின்கோடு, வேலைவாய்ப்பின் நிலை ஆகியவற்றையும் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் Next கொடுக்க வேண்டும்.

9. அடுத்து தோன்றும் பக்கத்தில் உங்களது கல்வித் தகுதி தொடர்பான பல்கலைக் கழகத்தின் பெயர், படிப்பின் பெயர், படிப்பு முடித்த ஆண்டு, சான்றிதழ் எண், பயிற்று மொழி, மெயின் பாடம் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து ADD கொடுங்கள். இதே போன்று உங்களுக்கு தேவையான கல்வித் தகுதிகளை உள்ளீடு செய்து ADD கொடுங்கள்.

10. அடுத்து தோன்றும் பக்கத்தில் தொழிற்கல்வி தொடர்பான டிப்ளமோ, சான்றிதழ் போன்ற விவரங்களை உள்ளிடுங்கள். தேவையில்லாததை விட்டுவிடலாம். பின் Next பட்டனை அழுத்துங்கள்.

11. அடுத்து தோன்றும் பக்கத்தில் டைப்ரைட்டிங், ஷார்ட் ஹேன்ட், கணிப்பொறி படிப்பு, என்சிசி போன்ற விவரங்களை டைப் செய்யுங்கள். தற்போது Save பட்டனை அழுத்துங்கள்.

12. அடுத்து Conitnue பட்டனை அழுத்துங்கள்.

13. தற்போது உங்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு அட்டை உருவாகி இருக்கும். அதை பிரின்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment