Inaiya Sevaigal: ஆன்லைனில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை சேர்ப்பது எப்படி?

ஆன்லைனில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை சேர்ப்பது எப்படி?


ஆன்லைனில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை சேர்ப்பது எவ்வாறு என்று பார்ப்போம்.



1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Registration/RegistrationHome.html

2. அடுத்து தோன்றும் பக்கத்தில் Select பட்டியில் Individual என்பதைத் தேர்ந்தெடுத்து Continue என்ற பட்டனை அழுத்துங்கள்.

3. அடுத்து தோன்றும் பக்கத்தில் பான் எண், பெயர், பிறந்த தேதி, Resident ஆகியவற்றை உள்ளிட்டு Continue என்ற பட்டனை அழுத்துங்கள்.

4. அடுத்து தோன்றும் பக்கத்தில் பாஸ்வேர்ட், செக்யூரட்டி வினாவிற்கான விடைகள், மொபைல் எண் ஆகியவற்றை கொடுங்கள்.

5.  Primary mobile number blongs to என்பதில் Self என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

6. இமெயில் முகவரியைக் கொடுத்து Primary email id belongs to என்பதில் self என்பதை தேர்ந்தெடுங்கள்.

7. அடுத்தாக முகவரி பகுதியில் நாடு, வீட்டு எண், தெரு, பின்கோடு, ஊர், அஞ்சலகம், மாவட்டம், மாநிலம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து Continue பட்டனை அழுத்துங்கள்.

8. அடுத்து தோன்றும் பக்கத்தில் மொபைல் எண் மற்றும் இமெயில் முகவரிக்கு வரும் ஓடிபி எண்களை உள்ளீடு செய்து Validate என்ற பட்டனை அழுத்துங்கள்.

9. தற்போது உங்கள் கணக்கு உறுதி செய்யப்பட்டு விட்டது.

10. உங்கள் பான் எண் தான் User Id ஆகும். பாஸ்வேர்ட் நீங்கள் கொடுத்ததே.

11. தற்போது உங்கள் User Id, Password ஐ பயன்படுத்தி லாக் இன் செய்யுங்கள்.

12. தற்போது தோன்றும் புதிய பக்கத்தில் Profile Settings என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

13. அதில் Aadhaar Details என்ற தொகுதியில் Link your Aadhaar என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

14. தற்போது தங்களின் ஆதார் எண், ஆதாரில் உள்ளவாறு பெயர் ஆகியவற்றை உள்ளிட்டு Link என்ற பட்டனை அழுத்துங்கள்.

15. UIDAI சரிபார்ப்புக்குப் பின் உங்களின் பான் எண்ணுடன் ஆதார் எண் சேர்க்கப்பட்டுவிடும்.

No comments:

Post a Comment