Inaiya Sevaigal: ஆன்லைனில் பட்டா, சிட்டா, புல வரைபடம் டவுன்லோட் செய்வது எப்படி?

ஆன்லைனில் பட்டா, சிட்டா, புல வரைபடம் டவுன்லோட் செய்வது எப்படி?


உங்கள் நிலத்தின் பட்டா, சிட்டா, புல வரைபடம் டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்

1. முதலில் கீழ்க்காணும் லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

http://eservices.tn.gov.in/eservicesnew/land/chitta_ta.html;jsessionid=F545FEA3BE18EB069E169D779F6A239C?lan=ta


2. உள்ளே சென்றவுடன் மாவட்டத்தை தேர்வு செய்யுங்கள்.

3. அடுத்ததாக கிராமப்புறமா? நகர்ப்புறமா? என்பதை தேர்வு செய்யுங்கள்.

4. அடுத்ததாக சமர்ப்பி பட்டனை அழுத்துங்கள்.

5. அடுத்து செல்லும் பக்கத்தில் வட்டம் மற்றும் கிராமத்தை தேர்வு செய்யுங்கள்.

6. அடுத்ததாக பட்டா எண் தெரிந்தால் பட்டா எண்ணை உள்ளிடுங்கள். அல்லது புல எண்ணை உள்ளிடுங்கள்.

7. புல எண்ணை உள்ளிட்டவுடன் சரியான உட்பிரிவு எண்ணை தேர்ந்தெடுங்கள்.

8. பட்டா,சிட்டா,புல வரைபடம் இதில் எது வேண்டுமோ? அதை தேர்ந்தெடுங்கள்.

9. அடுத்து உள்ள கேப்சாவை உள்ளிடுங்கள்.

10. பின் சமர்ப்பி பட்டனை அழுத்துங்கள்.

11. தற்போது பட்டா, சிட்டா, புல வரைபடம் இதில் எதை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்களோ? அது உங்கள் டவுன்லோட் ஃபோல்டரில் டவுன்லோட் ஆகி இருக்கும். பிரின்ட் எடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment