Inaiya Sevaigal: ஆன்லைனில் வில்லங்க சான்றிதழ் டவுன்லோட் செய்வது எப்படி?

ஆன்லைனில் வில்லங்க சான்றிதழ் டவுன்லோட் செய்வது எப்படி?

உங்கள் நிலம், மனை ஆகியவற்றின் வில்லங்க சான்றிதழை டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

1. கீழ்க்காணும் லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.

https://tnreginet.gov.in/portal/

2. உள்ளே சென்றதும், உள்நுழை என்ற பகுதியில் உள்ள பயனர் பதிவு என்பதை க்ளிக் செய்யுங்கள்.

3. பயனர் வகைப்பாடு என்பதில் குடிமக்கள் என்பதை தேர்வு செய்யுங்கள்.

4. பயனர் பெயர் என்பதில் தேவையான User name ஐ டைப் செய்யுங்கள்.

5. கடவுச்சொல் பகுதியில் தேவையான Password ஐ டைப் செய்யுங்கள்.

6. கடவுச்சொல் One Capital letter, One small letter, One number, One Special Character கண்டிப்பாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 10 எழுத்துக்களும் அதிகபட்சம் 20 எழுத்துக்களும் இருக்க வேண்டும். Special Character என்பதில் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும். $&()*,@[] ^_{}~£

7. பாதுகாப்பு வினா இடத்தில் ஞாபகம் வைத்துக்கொள்ளும்படி பதில் அளித்து வைத்துக்கொள்ளுங்கள்.

8. பின்பு திரு,திருமதி,செல்வி போன்றவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

9. அடுத்து முதல் பெயர், இடைப்பெயர், கடைப்பெயர் போன்றவற்றை டைப் செய்யுங்கள்.

10. அடுத்து பாலினத்தை தேர்ந்தெடுங்கள்.

11. அடுத்து ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் அட்டை, ரேசன் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் இதில் ஒன்றை தேர்ந்தெடுங்கள்.

12. அடுத்து அதன் எண்ணை பதிவிடுங்கள்.

13. அடுத்து இமெயில் முகவரியை பதிவிடுங்கள். மீண்டும் பதிவிட்டு உறுதி செய்யுங்கள்.

14. பிறந்த தேதி, தொலை பேசி எண்ணை பதிவிடுங்கள்.

15. அடுத்து மாநிலம், மாவட்டம், வட்டம், முகவரி, பின்கோடு ஆகியவற்றை பதிவிடுங்கள்.

16. அடுத்து கேப்சாவை பதிவிடுங்கள்.

17. அடுத்து ஓடிபி பெறுக பட்டனை அழுத்துங்கள்.

18. தற்போது உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி ஐ டைப் செய்யுங்கள்.

19. இறுதியாக பதிவினை முடிக்க பட்டனை அழுத்துங்கள்.

20. அடுத்ததாக உங்கள் இமெயில் முகவரிக்கு ஆக்டிவேசன் லின்க் அனுப்புவார்கள். அதை க்ளிக் செய்து ஆக்டிவேட் செய்யுங்கள்.

21. உங்கள் கணக்கு தயார் ஆகிவிட்டது.

22. இப்போது உங்கள் User name, Password மூலம் லாக் இன் செய்யுங்கள்.

23. அடுத்ததாக மின்னணு சேவைகள் தொகுதிக்கு சென்று வில்லங்க சான்றிதழை தொட்டு வில்லங்க சான்று விபரம் பார்வையிடுதல் என்பதை க்ளிக் செய்யுங்கள்.

24. அடுத்ததாக உங்களுக்கு தேவையான மண்டலம், மாவட்டம், சார் பதிவாளர் அலுவலகம், வில்லங்க சான்றிதழ் தேவைப்படும் ஆரம்ப தேதி, இறுதி தேதி, கிராமம், புல எண், உட்பிரிவு எண் ஆகியவற்றை தேர்ந்தெடுங்கள்.

25. அடுத்ததாக சேர்க்க என்ற பட்டனை அழுத்துங்கள்.

26. மற்ற அனைத்து கலங்களையும் விட்டு விட்டு நேராக கீழே வாங்கள். கீழே உள்ள கேப்சாவை டைப் பன்னுங்கள்.

27. அடுத்ததாக தேடுக பட்டனை அழுத்துங்கள்.

28. தங்களின் வில்லங்க சான்றிதழை பதவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள் என்று சொல்லும். அங்கே க்ளிக் செய்து உங்களின் வில்லங்க சான்றிதழை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment