உங்கள் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்றுவது எப்படி என்பதைப் பார்ப்போம்.
1. கீழே உள்ள லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லவும்.
https://ssup.uidai.gov.in/web/guest/aadhaar-home
(லின்க் செல்லவில்லை என்றால் இதை காப்பி செய்து அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்து Go பட்டனை அழுத்தவும்.)
2. Update Address என்ற பட்டனை அழுத்தவும்.
3. உங்களது ஆதார் எண் அல்லது விரிட்சுவல் எண்ணை உள்ளீடு செய்யவும்.
4. கீழே உள்ள சிறிய பெட்டியில் அருகில் உள்ள கேப்சா வை உள்ளீடு செய்யவும்.
5. ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அந்த எண்ணை உள்ளீடு செய்து லாக் இன் செய்யவும்.
6. அடுத்ததாக Have a address Proof என்பதை தேர்ந்தெடுத்து சப்மிட் செய்யவும்.
7. அடுத்ததாக நமது தற்போதைய முகவரி சரியாக எந்த ஆவணத்தில் உள்ளதோ அதை எடுத்துக்கொள்ளவும். அதில் எவ்வாறு முகவரி உள்ளதோ? அதோ போல் தான் உள்ளீடு செய்ய வேண்டும். ஒரு எழுத்துக்கூட மாறி இருத்தல் கூடாது. எனவே கவனமுடன் நமது முகவரி சரியாக உள்ள ஆவணத்தை தேர்ந்தெடுக்கவும்.
8. பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு வரி ரசீது, ரேசன் கார்டு, வங்கி புத்தகம், அஞ்சலக புத்தகம், குடிநீர் வரி ரசீது, தொலை பேசி கட்டண ரசீது, அரசின் அடையாள அட்டை, மின்கட்டண ரசீது, இன்சுரன்ஸ் ரசீது, கேஸ் இணைப்பு புத்தகம் இவற்றில் ஏதேனும் ஒன்றை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.ஆனால் ஒன்று எதில் முகவரி சரியாக உள்ளதோ? அதை மட்டும் பயன்படுத்திக்கொள்ளவும்.
9.அந்த ஆவணத்தை ஸ்கேன் செய்து 2 MB க்குள் மாற்றி உங்களது பெயரை இட்டு சேமித்து வைத்துக்கொள்ளவும்.
10. நமது சரியான முகவரியை தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளீடு செய்யவும்.
11. ஆங்கிலத்தில் எளிதில் உள்ளீடு செய்து விட முடியும்.
12. ஆங்கிலத்தில் உள்ளீடு செய்தவுடன் அதற்குரிய தமிழாக்கம் தானாக அருகில் தோன்றும். அதில் ஒற்றெழுத்து, குறில், நெடில், ற, ர, ள,ழ,ல,ன,ண போன்ற வேறுபாடுகள் ஏதேனும் இருந்தால் இரண்டு முறை ஓரே ஆங்கில எழுத்துக்களை உள்ளீடு செய்து சரிசெய்து விடலாம். இவ்வாறாக முழு முகவரியையும் உள்ளீடு செய்ய வேண்டும்.
13. உதாரணமாக Manalmedu என்று உள்ளீடு செய்தால் மனல்மெடு என்று காண்பிக்கும். ன என்பதை அழத்து விட்டு N என்று உள்ளீடு செய்தால் ண என்று காண்பிக்கும். அடுத்ததாக மெ என்பதை அழித்து விட்டு mme என்று மேஎ என்று காண்பிக்கும். நாம் எ வை அழித்து விட்டு மே என்பதை மட்டும் வைத்துக்கொள்ளலாம். இவ்வாறாக எடிட் செய்து மணல்மேடு என்பதை உருவாக்கி விடலாம். இவ்வாறாக நாமே தமிழ் பகுதியில் தேவையானவற்றை அழித்து விட்டு ஓரிரு ஆங்கில வார்த்தையை சேர்த்து உள்ளீடு செய்து தேவையான சரியான தமிழ் வார்த்தையை உருவாக்கி விடலாம்.
14. அடுத்ததாக பின்கோடு, ஏரியா, நகரம், மாவட்டம், மாநிலம் போன்றவை அதிலேயே இருக்கும் நாம் தேர்ந்தெடுத்தால் போதும்.
15. அடுத்ததாக சப்மிட் கொடுக்கவும்.
16. அடுத்ததாக நாம் உள்ளீடு செய்தது சரியா என கேட்கும். சரியாக இருந்தால் Proceed கொடுக்கவும். இல்லையென்றால் Modify கொடுத்து சரிப்படுத்தவும்.
17. அடுத்த பகுதியில் அங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஆவணத்தில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கவும். அதற்கு அருகில் உள்ள Choose file selection என்ற இடத்தில் நாம் ஸ்கேன் செய்து சேமித்து வைத்துள்ள நமது ஆவணத்தை அப்லோட் செய்து சப்மிட் கொடுக்கவும். சரியான ஆவணமா என்று கேட்கும். ஆம் என்பதை தேர்ந்தெடுக்கவும்.
18. அடுத்ததாக BPO service provider என்று இருக்கும். அதில் ஏதேனும் ஒன்றை செலக்ட் செய்து சப்மிட் கொடுக்கவும்.
18. இப்போது நமது விண்ணப்பித்திற்கான அக்னாலெட்ஜ்மென்ட் எண் வந்து விடும். எதிர் வரும் காலத்தில் நமது விண்ணப்பத்தின் நிலையை அறிய இந்த அக்லாலெட்ஜ்மென்ட் எண் பயன்படும்.
19. 20 நாட்களுக்குள் நமது சரியான முகவரி அப்டேட் ஆகிவிடும்.
20. தற்போது நமது புதிய ஆதாரை டவுன்லோட் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

Athaarla date of birth 2/8/1986 kku 8/2 1986 Mari irrukku athaarla 2times than correction Panna mudiyuma mela panna mudiyatha pls reply
ReplyDelete